மெட்ராஸ் “ஐ” என்றால் என்ன? அறிகுறிகள் எப்படி இருக்கும் ?

Advertisement

Madras Eye Symptoms in Tamil!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்நோய் எளிதாக தாக்குகின்றது. மெட்ராஸ் “ஐ” கண்நோயால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து கொண்டேதான் வருகின்றது. மெட்ராஸ் ஐ நோயானது எளிதில் குணப்படுத்தக்கூடிய ஒரு சாதாரண தொற்று நோய்தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருப்பினும் நீங்கள் ஆரம்பத்திலையே அதனை கண்டறிந்து உரிய சிகிச்சை பெற வேண்டும். இல்லையென்றால் கண் பார்வை தெளிவற்று போகுதல் போன்ற பல கண் பிரச்சனைகள் வர நேரிடும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்!  நாம் இப்பதிவில் பார்க்க இருப்பது “மெட்ராஸ் ஐ கண்நோய் பற்றிய முழுதகவல்களை பற்றித்தான்!

மெட்ராஸ் ஐ என்றால் என்ன?

 • இந்நோயானது வட அமெரிக்காவில் சிவந்த கண்” என்றும் இந்தியாவில் மெட்ராஸ் ஐ” என்றும் அழைக்கப்படுகிறது.
 • கண்ணையும் இமையையும் இணைக்கின்ற சவ்வு படலத்தில் ஏற்படுகின்ற வைரஸ் தொற்றுதான் மெட்ராஸ் ஐ ஆகும்.
 • பருவ நிலை மாறும் போது  இந்த வைரஸ் உருவாகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றால் இந்நோய் ஏற்படுகிறது.
 • நோய் எதிர்ப்பு சக்தி குறைவினாலும் மெட்ராஸ் “ஐ” எளிதாக தாக்குகின்றது.

👉கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

“மெட்ராஸ் ஐ” கண் நோயின் முக்கிய அறிகுறிகள்:

 • கண்கள் சிவந்து காணப்படுதல்
 • கண்களில் எரிச்சல் ஏற்படுதல்
 • கண்களில் அரிப்பு ஏற்படுதல்
 • கண்களில் தொடர்ச்சியான வலி
 • கண்களில் அதிக நீர்சு ரப்பது
 • கண்களில் வீக்கம் ஏற்படுவது
 • கண்களில் இருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல்
 • வெளிச்சத்தை பார்க்க சிரமப்படுதல்
 • கண் உறுத்தல்
 • கண்களில் பூழை தள்ளுதல்
 • சிலருக்கு தலைவலி முக வீக்கம் போன்ற அறிகுறிகளும் ஏற்படும்.

madras eye symptoms in tamil

போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாமல் உடனே கண் மருத்துவரை சந்தித்து கண்ணிற்கு உரிய சிகிச்சை பெற வேண்டும்.

👉கண்பார்வை பல மடங்கு அதிகரிக்க டிப்ஸ்..!

மெட்ராஸ் “ஐ” எவ்வாறு பரவுகிறது?

how to avoid madras eye in tamil

 • இந்நோயானது காற்று மற்றும் தூசுக்கள் மூலம் பரவுகிறது.
 • மெட்ராஸ் ஐ நோய் உள்ளவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்துவதாலும் எளிதாக பரவுகிறது.
 • மெட்ராஸ் ஐ நோய் உள்ளவர்கள் தும்முதல், இருமுதல் மூலமும் இந்நோய் பரவுகிறது.
 • இந்நோய்க்கு கருப்பு கண்ணாடிகளை பயன்படுத்துவதால் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவாது என்பது தவறு.
 • இந்நோய் ஒரு கண்ணில் இருந்து மற்றொரு கண்ணுக்கு எளிதாக பரவக்கூடியது.
 • நோய்த்தொற்று உள்ளவர்கள் கண்களை அடிக்கடி தொட கூடாது.

மெட்ராஸ் “ஐ”  உள்ளவர்கள் செய்ய வேண்டியவை:

 madras eye symptoms in tamil

 • கண்களை குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவ வேண்டும்.
 • மிதமான சூட்டில் வெந்நீரில் துண்டை நனைத்து கண்ணுக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

👉குழந்தையின் கண் பார்வை திறனை அதிகரிக்கும் உணவுகள்..!

 

இதுபோன்ற மேலும் பலவகையான அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement