Menopause Symptoms in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மெனோபாஸ் ஆரம்ப அறிகுறிகள் தமிழில் (Menopause Arikurigal Tamil) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். பெண்களுக்கு மாதவிடாய் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. மாதவிடாய் வந்தாலும் பிரச்சனை, வரவில்லை என்றாலும் பிரச்சனை தான். எப்படி வந்தாலும் பிரச்சனை என்று நினைக்கிறீர்களா.! மாதவிடாய் வந்த பிறகு உடல் வலி, வயிற்றுவலி, தலைவலி, மன அழுத்தம் போன்ற பிரச்சனை ஏற்படும். அந்த நேரத்தில் உங்களுக்கு ஏன் பெண்ணாக பிறந்தோம் என்றெல்லாம் நினைப்பீர்கள். அதே போல மாதவிடாய் வரவில்லை என்றாலும் இந்த மாதம் ஏன் மாதவிடாய் வரவில்லாய் உடலில் ஏதும் பிரச்சனை இருக்குமோ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பிப்போம். பெண்களுக்கு ஒரு 40 அல்லது 45 வயது எட்டியதும் மாதவிடாய் நிற்க ஆரம்பிக்கும். இதை எப்படி கண்டறிவது என்று யோசிப்பீர்கள். அதனால் தான் இந்த பதிவில் மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
menopause age and symptoms in tamil:
மெனோபாஸ் என்றால் என்ன:

மெனோபாஸ் என்பது மாதவிடாய் நிறுத்தத்தை குறிக்கிறது. பெண்களுக்கு வயது அதிகரிக்கும் போது பாலின ஹார்மோன்கள் சுரப்பதில்லை. இதனால் கருப்பையிலிருந்து கருமுட்டைகள் வெளிவராது. பெண்களுக்கு தொடர்ந்து 12 மாதங்களுக்கு மாதவிடாய் வரவில்லை என்றால் அவை மாதவிடாய் நிறுத்தமாகும். இவை 40 வயது முதல் 55 வயதிற்குள் நிகழும்.
மாதவிடாய் சரியாக வர இதை மட்டும் செய்யுங்கள்..!
மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகள்:

மாதவிடாய் நிறுத்தத்தின் போது உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதனுடைய மாற்றம் நபருக்கு நபர் மாறுபடும்.
- ஒழுங்கற்ற மாதவிடாய்,
- மாதவிடாய் தாமதமாக வருவது
- அதிகம் அல்லது குறைந்த நாட்கள் மாதவிடாய் ஏற்படும்.
- மூட்டு வலி
- மார்பக வலி
- அதிகம் அல்லது குறைவான உதிரப்போக்கு ஏற்படும்.
- இரவில் அதிகமாக வியர்ப்பது
- தூக்கமின்மை
- எடை அதிகரித்தல்
- முடி உதிர்வு
- வறண்ட சருமம்
- உடல் குளிரும் நிலை ஏற்படுவது
- அதிகமான உடல் சூடு
- அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும், அல்லது தும்மல், இருமல் ஏற்படும் போது சிறுநீர் வருவது.
மாதவிடாய் காலத்தில் வலி இல்லாமல் இருக்க இதை மட்டும் செய்யுங்கள்.!
மாதவிடாய் நிறுத்தத்தின் காரணம்:
மாதவிடாய் நிறத்தட்டின் முக்கிய காரணம் பெண்களின் வயது அதிகரிக்கும் போது உடலில் பாலியல் ஹார்மோன்களின் சுழற்சி குறைவாகுவதால் மாதவிடாய் நிறைவிடைகின்றன. முதலில் மாதவிடாய் ஒழுங்கற்றதாகி, நாளடைவில் மாதவிடாய் நின்று விடுகிறது. பெண்களுக்கு வயது அதிகரிக்கும் போது பாலின ஹார்மோன்கள் சுரப்பதில்லை. இதனால் கருப்பையிலிருந்து கருமுட்டைகள் வெளியிடுவதை நிறுத்துவதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
சரியான அளவில் கால்சியம்:
உணவில் போதுமான அளவு கால்சியம் எடுத்துகொள்வதை உறுதி செய்யுங்கள். நாள் ஒன்றுக்கு 1200 மில்லிகிராம் அளவு கால்சியம் உடலுக்கு தேவைப்படும். கால்சியம் பற்றாக்குறை ஆகும் போது எலும்பு உறுதி குறைகிறது. எலும்பு மென்மையாகிறது. இதனால் ஆஸ்டியோபொராசிஸ் பிரச்சனைக்கான ஆபத்து அதிகரிக்கிறது.
சரியான அளவு வைட்டமின் டி:
கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துகொண்டாலும் அது உடல் உறிஞ்சுகொள்வதற்கு வைட்டமின் டி அவசியம். வைட்டமின் டி ஆனது சூரியனிடமிருந்து பெறக்கூடியது. தினமும் காலை 10.30 முதல் 12 மணிக்குள் 20 நிமிடங்களாவது வெயிலில் நில்லுங்கள். அதோடு வைட்டமின் டி நிறைந்த உணவுகளிலும் கவனம் செலுத்துங்கள்.
சரியான அளவில் இரும்புச் சத்து:
ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு இயற்கையாகவே இரும்புச்சத்து குறைபாடு இருக்கும். மாதவிடாய் உதிரபோக்கை ஈடு செய்வதில் குறைபாடு இருக்கும் போது ஹீமோகுளோபின் அளவு குறையக்கூடும். இது உடலுக்குள் இருக்கும் போது மெனோபாஸ் கால அறிகுறிகளில் ரத்த சோகையும் வந்தால் அது உடல் ஆரோக்கிய குறைபாட்டை உண்டாக்கிவிடவே செய்யும். தினசரி உணவில் 8 மில்லிகிராம் அளவு இரும்புச்சத்து அவசியம்.
சரியான அளவில் நார்சத்து:
மெனொபாஸ் காலத்துக்கு முந்தைய பெரிமெனோபாஸ் காலங்களில் பெண்கள் உடல் எடை அதிகரிக்க கூடும். இதை தடுக்க நார்ச்சத்து மிகுந்த உணவுகள் அவசியம். இது பசி உணர்வை தடுக்க கூடும். வளர்சிதை மாற்றத்தை சீர் படுத்த உதவும்.
சரியான அளவில் புரதம்:
பெரிமெனோபாஸ் காலத்தில் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் இன்னும் தேவையாக இருக்கலாம். இந்த காலங்களில் தசை வலிமை வெகுவாக குறைய தொடங்குகிறது. இதை ஈடு செய்ய நீங்கள் புரதம் மிகுந்த உணவை சேர்ப்பதும் அவசியம்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்:
ஒமேகா 3 மனநிலையோடு தொடர்பு கொண்டவை இது வீக்கம் போன்ற உபாதைகளையும் கட்டுப்படுத்த செய்கிறது. பெரும்பாலான பெண்கள் பெரிமெனோபாஸ் காலத்தில் மனச்சோர்வை அதிகமாக கொண்டிருக்கிறார்கள்.
கருப்பை இறக்கம் இருப்பதை காட்டும் அறிகுறிகள் என்ன..?
| மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |














