Migraine Symptoms in Tamil
நம் முன்னோர்கள் காலத்தில் உணவே மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் மருந்தே உணவாகி விட்டது. உணவை விட சாப்பிடும் மருந்து மாத்திரைகள் தான் அதிகமாகி விட்டது. சுற்றுசூழல் மாசுபாடு, உணவு முறை போன்ற காரணத்தினால் நோய்கள் ஏற்படுகின்றது. நோய்கள் வந்த பிறகு அதனை எப்படி சரி செய்வது என்று யோசிப்பதை விட நோய்கள் வருவதற்கு முன்னே கண்டறிய வேண்டும். அதை எப்படி கண்டறிவது எண்டது யோசிக்கிறீர்களா.! ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு அறிகுறி இருக்கிறது. அதை தெரிந்து கொண்டாலே நோய்களை ஆரம்ப நிலையிலே கண்டறிய வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கான அறிகுறிகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
ஒற்றை தலைவலி வருவதற்கான காரணம்:
தலைவலிகளில் பல வகைகள் உள்ளது. அதில் ஒன்று தான் ஒற்றை தலைவலி. ஒற்றை தலைவலியானது தலை வெடிக்கிற அளவிற்கு வலியாக இருக்கும். இவை சாதாரண தலைவலி போல் வந்தவுடன் நீங்காது. 2 மணி நேரம் அல்லது நாள் முழுவதும் கூட நீடிக்கலாம். ஆனால் ஒற்றை தலைவலி இருக்கும் போது ஏன்டா இருக்கிறோம் என்ற வலியை கொடுக்கும்.
இவை பொதுவாக ஒரு பக்கம் தான் வரும் என்றல்ல இரு பக்கமும் வருவதற்க்கு வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுடைய ஜீனில் யாருக்கும் இருந்தால் ஏற்படும், சரியாக தூங்காமல் இருப்பது, சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது, வெயிலில் அலைவது போன்ற காரணத்தினால் ஒற்றை தலைவலி ஏற்படும்.
ஆட்டோ இம்யூன் மயோசிடிஸ் நோய் அறிகுறி….
ஒற்றை தலைவலி அறிகுறிகள்:
ஒற்றை தலைவலி வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சில அறிகுறிகளை வெளிப்படும். அவை என்னென்ன அறிகுறிகள் என்று தெறித்து கொள்வோம் வாங்க..
- மலசிக்கல்
- பசி அதிகமாக ஏற்படும்
- அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள்
- அடிக்கடி கொட்டாவி ஏற்படும்
ஒற்றை தலைவலியா என்பதை அறிய:
ஒற்றை தலைவலி எனது குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை வந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு தடவையும் வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக தலைவலியானது அதிகரிக்கும். தலை வலிக்கும் போது பார்வையானது சரியாக தெரியாது, மயக்கம் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனை ஏற்ப்பட்டால் அவை ஒற்றை தலைவலி.
உங்க பிள்ளைகள் படிப்பில் மந்தமாக இருக்கிறார்களா.! அப்போ இதுவாக இருக்கலாம் என்னன்னு தெரிஞ்சுக்கோங்க..
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |