Monkeypox Symptoms in Tamil | குரங்கு அம்மை நோய் அறிகுறிகள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். குரங்கு அம்மை பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். குரங்கு அம்மை நோய் என்பது வைரஸ் தொற்றால் உண்டாகும் பெரியம்மை போன்ற நோய் ஆகும். இதனை ஆங்கிலத்தில் மங்கிபாக்ஸ் (Monkeypox) என்று கூறப்படுகிறது. இந்நோய் மனிதர்களையும் விலங்குகளையும் தாக்கக்கூடிய வைரஸ் தொற்று ஆகும்.
எனவே, நாம் அனைவருமே குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் Monkeypox Symptoms in Tamil பற்றி கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.
குரங்கு அம்மை நோய் என்றால் என்ன.?
குரங்கு அம்மை நோய் என்பது ஒரு அரிய வகை வைரஸ தொற்று ஆகும். இது பெரியம்மை நோய் போன்றது. ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் இனத்தை சேர்ந்தது. மங்கிபாக்ஸ் வைரஸ் இரண்டு வகைகளில் உள்ளது. ஒன்று கிளேட் I, மற்றொன்று கிளாட் II ஆகும். இது முதலில் விலங்குகளிடம் இருந்து மனிதருக்கு பரவி, பிறகு மனிதனிடமிருந்து மனிதனுக்கே பரவுகிறது.
அம்மை போட்டவர்கள் ஏன் கண்ணாடி பார்க்க கூடாதுனு தெரியுமா..?
What is Monkeypox Symptoms in Tamil:
- அதிக காய்ச்சல்
- தொண்டை புண்
- தலைவலி
- தசைவலி
- முதுகுவலி
- உடல் வீக்கம்
- நடுக்கம்
- முதுகுவலி
- குறைந்த ஆற்றல்
- வீங்கிய நிணநீர் முனைகள்
மேலே கூறப்பட்டுள்ள அனைத்தும் குரங்கு அம்மை நோய் வருவதற்கான அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகள் தோன்றிய பிறகு, அதனை தொடர்ந்து கொப்புளம், தடிப்புகள் போன்றவை ஏற்படக்கூடும்.
இந்த அறிகுறிகள் 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். மேலும், உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களுக்கு 4 வாரங்களுக்கு மேலாகவும் நீடிக்கலாம்.
குரங்கு அம்மை நோய் எப்படி பரவுகிறது.?
- இந்நோய் விலங்கின் கடியாலோ அல்லது விலங்கின் கீறல் பட்டாலோ, காட்டில் வேட்டையாடிய விலங்கின் இறைச்சியை கையாள்வதாலோ பரவுகிறது.
- நோய் ஏற்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலோ குரங்கு அம்மை நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.
- இந்நோய், முதலில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. அதன் பிறகு, மனிதர்களிடமிருந்து மனிதருக்கே பரவுகிறது.
அம்மை தழும்பு மறைய இயற்கை வைத்தியம்..!
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |