கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுவதற்கான அறிகுறிகள்

Advertisement

கருப்பு நிறத்தில் மலம்

இன்றைய கால கட்டத்தில் யார் பணக்காரன் என்றால் பணத்தை அதிகமாக வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள் அல்ல. எந்த நோயும் இல்லாமல், மருந்து மாத்திரை எடுத்து கொள்ளாமல் இருக்கிறானோ அவனே பணக்காரன். தொழில்நுட்பம் வளர வளர நோய்களும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆரோக்கியத்தில் யாரும் அக்கறை செலுத்துவதில்லை. வேலை வேலை எண்டது ஓடி கொண்டு இருக்கிறார்கள். நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை ஆரம்பத்திலே கண்டறிந்தால் நோய்களை எளிமையாக குணப்படுத்தி விடலாம். அதற்கு நீங்கள் ஒவ்வொரு நோயின் அறிகுறிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுவதற்கான காரணங்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

கருப்பு நிறுத்தில் மலம் வெளியேறுவதற்கான காரணங்கள்:

மாத்திரை:

கருப்பு நிறுத்தில் மலம் வெளியேறுவதற்கான காரணங்கள்

நீங்கள் இரும்பு சத்து குறைபாடு அல்லது இரத்த சோகை போன்ற பிரச்சனைக்ளுக்கு இரும்பு சத்து மாத்திரை எடுத்து கொண்டால் மலமானது கருப்பாக வெளியேறும்.

உணவு முறை:

கருப்பு நிறுத்தில் மலம் வெளியேறுவதற்கான காரணங்கள்

காரமான உணவுகள், திராட்சை சாறு, சாக்லேட், கருப்பு அதிமதுரம் போன்றவை உட்கொண்டாலும் மலம் கருப்பாக வெளியேறும்.

சாப்பிட்ட உடன் மலம் கழிப்பவர்களுக்கு தீர்வு

செரிமான பிரச்சனை: 

கருப்பு நிறுத்தில் மலம் வெளியேறுவதற்கான காரணங்கள்

நீங்கள் சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆகாமல் குடலிலே தங்கி கொள்ளும். இதனால் குடல் சீரான முறையில் இயங்காது. முக்கியமாக இரவு உணவை எளிதில் செரிக்க கூடிய உணவுகளாக எடுத்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் காலையில் மலமானது கருப்பு நிறத்தில் வெளியேறும்.

வயிற்றுப்புண்:

கருப்பு நிறுத்தில் மலம் வெளியேறுவதற்கான காரணங்கள்

உங்களுக்கு வயிற்றுப்புண் பிரச்சனை இருந்தால் செரிமான மண்டலத்திலிருந்து கழிவுகள் வெளியேறும் போது இரத்தம் சேர்ந்து கருப்பு நிறத்தில் மலம் கழிக்க வேண்டியிருக்கும்.

குடல் புற்றுநோய்:

கருப்பு நிறத்தில் மலம்

கருப்பு நிறத்தில் மலம் வெளியேறினால் குடல் புற்றுநோய் அறிகுறிகளாக இருக்கிறது. ஒருவேளை குடல் புற்றுநோயாக இருந்தால் மலசிக்கல் பிரச்சனை, குடல் இயக்கம் சீராக செயல்படாமல் கருப்பு நிறத்தில் மலம் வெளியேறும்.

இரத்த உறைவு:

உடலில் இரத்த உறைவு பிரச்சனை இருந்தாலும் கருமை நிறத்தில் மலம் வெளியேறும்.

மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகளோடு கருப்பு நிறத்தில் மலம் வெளியேறினால் மருத்துவரை அணுக வேண்டும்.

கருப்பை இறக்கம் இருப்பதை காட்டும் அறிகுறிகள் என்ன..?

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement