நிமோனிய காய்ச்சலின் அறிகுறிகள்

Advertisement

நிமோனியா காய்ச்சல் அறிகுறி

பொதுவாக காய்ச்சல் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்பட கூடிய ஒன்று. காய்ச்சல் வந்தாலே சளி, இருமல், உடல் சோர்வு, தலைவலி போன்ற பிரச்சனைகளும் சேர்ந்து ஏற்படவும். இதனை நம்மால் தாங்க முடியாது. சாதரண காய்ச்சல் வந்தாலே இவ்வளவு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதில் டைபாய்டு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், நிமோனியா காய்ச்சல் என்று பல வகைகள் இருக்கிறது. எல்லா காய்ச்சலையும் ஒவ்வொரு அறிகுறிகள் வெளிப்படுத்துகின்றன. அதை வைத்து நமக்கு எந்த காய்ச்சல் என்று அறிந்து கொள்ளலாம். இந்த பதிவில் நிமோனிய காய்ச்சல் அறிகுறிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..

நிமோனியா காய்ச்சல் என்றால் என்ன.?

நிமோனியா காய்ச்சல் அறிகுறி

நிமோனியா காய்ச்சல் என்பது வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் ஒட்டுண்ணிகளால் ஏற்படக்கூடிய நுரையீரலின் (கீழ் சுவாசக் குழாயில் ஏற்பட கூடிய தொற்றாகும். இது பொதுவாக தொண்டை அல்லது மேல் சுவாசக் குழாயின் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றின் நீட்சியாகும் .

நிமோனியா காய்ச்சல் அறிகுறிகள்: 

  • காய்ச்சல்
  • இருமல்
  • மூச்சுத்திணறல்
  • மூக்கடைப்பு
  • நெஞ்சு வலி
  • வயிற்று வலி
  • வாந்தி
  • பசியின்மை

காய்ச்சல் தீவிரமடைந்தால் உதடுகள், நகங்கள் நீலம் அல்லது சாம்பல் நிறத்தில் காட்சியளிக்கும்.

ஆட்டோ இம்யூன் மயோசிடிஸ் நோய் அறிகுறி

நிமோனியா எதனால் ஏற்படுகிறது.?

சளி, காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்த்தொற்றுகளான அடினோவைரஸ், ரைனோவைரஸ், இன்ஃப்ளூயன்ஸா (காய்ச்சல்), சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV) மற்றும் Parainfluenza வைரஸ் ஆகியவற்றை ஏற்படுத்தும் பொதுவான வைரஸ்களால் நிமோனியா ஏற்படுகின்றன .

நிமோனியா பிரச்சனை உள்ளவர்கள் தும்மல் அல்லது இருமல், அல்லது பகிரப்பட்ட குடிநீர் கண்ணாடிகள் அல்லது பாத்திரங்கள், அல்லது பயன்படுத்திய திசுக்கள் போன்றவற்றிலிருந்து நிமோனியா பரவுகிறது.

யாருக்கெல்லாம் நிமோனியா ஏற்படும்:

நிமோனியா யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், சில குழந்தைகளுக்கு நிமோனியா ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் ஏற்ப்டுகிறது.

இதயம் அல்லது நுரையீரல் பிரச்சனை உள்ள குழந்தைகள்

ஆஸ்துமா பிரச்சனை உள்ள குழந்தைகள்

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள்

முன்கூட்டியே பிறந்த குழந்தைகள்

உங்க பிள்ளைகள் படிப்பில் மந்தமாக இருக்கிறார்களா.! அப்போ இதுவாக இருக்கலாம் என்னன்னு தெரிஞ்சுக்கோங்க

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement