நிபா வைரஸ் அறிகுறிகள் | Nipah Virus Symptoms in Tamil..!

Advertisement

நிபா வைரஸ் அறிகுறிகள் | Nipah Virus Symptoms in Tamil..!

மனிதர்கள் மட்டும் இன்றி விலங்குகள், பறவைகள் என அனைவருக்கும் காய்ச்சல் வருவது என்பது சாதாரணமான ஒன்று. அந்த வகையில் மனிதர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் வருதல், சளி பிடித்தல் மற்றும் இருமல் என இதுபோன்ற பிரச்சனைகள் தான் அதிகமாக வருகிறது. அப்படி பார்த்தால் காய்ச்சலில் எண்ணற்ற வகைகள் உள்ளது. அதிலும் ஒரு சில வைரஸ் காய்ச்சல் ஆரம்பத்தில் ஒருவருக்கு வந்தாலும் அதன் பிறகு ஒவ்வொருவருக்காக பரவ ஆரம்பிக்கிறது. ஒரு சில நேரத்தில் நமது உடம்பில் தோன்றும் அறிகுறிகள் எதற்கு என்று கண்டுபிடிக்குப்பதற்குள் அத்தகைய நோய் நம்மை பாடாய்படுத்தி விடும். அதனால் போதுமான அளவு வைரஸ் தொற்று, காய்ச்சல் என இவற்றிக்கு எல்லாம் என்னென்ன அறிகுறிகள் என்பதை தெரிந்து வைத்து இருப்பது நல்லது. அதனால் இன்று நிபா வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

கருப்பை இறக்கம் இருப்பதை காட்டும் அறிகுறிகள் என்ன 

நிபா வைரஸ் என்றால் என்ன..?

நிபா வைரஸ் என்பது 1998-ஆம் ஆண்டு தான் கண்டறியப்பட்டது. இத்தகைய வைரஸ் பெரும்பாலும் விலங்குகள் மற்றும் மனிதர்களை தான் அதிகமாக பாதித்து வருகிறது. இதனை ஜூனோடிக் வைரஸ் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

மேலும் இந்த நிபா வைரஸ் ஆனது பழ வௌவால்களிடம் இருந்து தான் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பரவுகிறது.

நிபா வைரஸ் அறிகுறிகள்:

நிபா வைரஸ் அறிகுறிகள்

 

  1. காய்ச்சல்
  2. தலைவலி
  3. குமட்டல்
  4. வாந்தி
  5. தசைவலி
  6. மூளை வீக்கம்
  7. மயக்கம்
  8. மூச்சு விடுவதில் சிரமம்
  9. மனக்குழப்பம்
  10. தொண்டை புண்

மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் நிபா வைரஸுக்கான அறிகுறிகளாக இருந்தாலும் கூட இவை இல்லாமல் வேறு ஏதேனும் அறிகுறிகள் தோன்றினாலும் அதனை மருத்துவரிடம் கூற வேண்டும்.

நிபா வைரஸ் தடுப்பது எப்படி..?

நிபா வைரஸுக்கு இன்னும் போதுமான அளவு மருத்துவம் எதுவும் கண்டறியப்படாத காரணத்தினால் இத்தகைய வைரஸ் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் மற்றும் பறவைகள் என இவை எல்லாம் சாப்பிடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் விலங்குகள் சாப்பிடுவதை மனிதர்களும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் வரும் முன் காப்பதே நல்லது.

கல்லீரல் கொழுப்பு அறிகுறிகள்

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement