அப்செஸிவ்-கம்பல்சிவ் கோளாறு (OCD)
அப்செஸிவ்-கம்பல்சிவ் கோளாறு (OCD) என்பது ஒரு நபருக்கு பொதுவான ஏற்படும் நீண்ட காலக் கோளாறாகும், இதில் அந்த நபரை கட்டுப்படுத்த முடியாத அளவு மீண்டும் மீண்டும் நிகழும் எண்ணங்கள், ஆவேசங்கள், நிகழ்வுகள் போன்றவற்றல் பாதிக்கப்படுவர்.
OCD பாதிக்கப்பட்ட ஒருவர் சில நடைமுறைகளை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்பார். அல்லது தேவையில்லாத சில விசயங்களை பற்றி மீண்டும் மீண்டும் அதிகமாக யோசித்துக் கொண்டிருப்பார். OCD யால் பாதிப்புக்குள்ளானவர்களால் சிறிது நேரத்திற்கும் மேல் தங்கள் எண்ணங்கள் அல்லது செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாது. பொதுவாக இவர்கள் செய்யும் செயல்களில் கை கழுவுதல், பொருட்களை எண்ணுதல் மற்றும் கதவு பூட்டப்பட்டுள்ளதா என்று பார்த்தல் போன்ற செயல்களை மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இருப்பார்கள். இது பொதுவாக ஒரு நாளில் ஒரு மணிநேரத்திற்கும் மேல் நீடிக்கும்.
OCD பாதிப்பிற்கான காரணம் இதுவரை அறியப்பட வில்லை. இந்த பாதிப்பு ஓத்த இரட்டையர்களை அதிகம் பாதிக்கிறது. ocd யால் பாதிக்க படுபவர்கள் பெரும்பாலானவர்கள் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த OCD பாதிப்பை பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..
OCD யின் அறிகுறி:
- தேவையற்ற எண்ணம், உருவம் அவர்கள் மனதில் மீண்டும் மீண்டும் நுழைந்து அவர்களை பாதிக்கும்.
- சில நேரங்களில் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் அதிக கோவப்படுவர்கள்.
- ocd பிரச்சனையால் கவலை மற்றும் மன அழுத்தத்திற்கு தள்ளப்படுவர்கள்.
- வெறித்தனமாக செயல்படுவது, பதட்டம் வன்முறையில் ஈடுபத்துவது போன்றவை ocd யின் அறிகுறி ஆகும்.
அல்சைமர் நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா..?
OCD உள்ளவர்களில் உள்ள கட்டாய நடத்தையின் பொதுவான வகைகள்:
- உடல் மற்றும் இருப்பிட சுத்தம் பற்றி மிக அதிக அக்கறை மற்றும் அடிக்கடி கை கழுவுதல்.
- கதவுகள் பூட்டப்பட்டுள்ளதா அல்லது எரிவாயு அணைக்கப்பட்டுள்ளதா போன்ற செயல்களை அதிக முறை சரிபார்த்தல்.
- ஒரு பொருளை அதிக முறை எண்ணுதல்.
- அனைவர் மேலும் நம்பிக்கையற்று அவர்களிடம் உறுதி கேட்பது.
OCD சிகிச்சை:
உங்களுக்கு ocd பிரச்சனை இருப்பதாக உணர்தல், நீங்கள் முதலில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினரிடம் மனம் விட்டு பேசுங்கள். அவர்களிடம் உங்கள் பிரச்சனைகளை கூறுவதன் மூலம் உங்களுக்கு மன ஆறுதல் கிடைக்கும். அல்லது உடனே ஒரு மன நல மருத்துவரை அணுகவும். நீங்கள் உங்கள் கருத்துக்களை கூறி அவரது ஆலோசனையை பெறலாம்.
ஆளுமை சீதைவுக்கான அறிகுறிகள் என்ன தெரியுமா..?
OCD தொடர்புடைய பிரச்சனைகள்:
- OCD யால் பாதிக்கப்படடவர்கள் மனசோர்வு, சோகம் மற்றும் நம்பிக்கையின்மை போன்ற உணர்வுகளால் பாதிக்க படுவார்கள்.
- உங்களது உணவு முறை பாதிக்கப்படும். அதனால் உங்களது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
- அதிக பொருட்களை சேர்த்து வைப்பது, ஆனால் அவற்றை நிர்வகிக்க சரியான நிர்வாக திறமை இல்லாமல் கவலைப்படுவது.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |