பக்கவாதம் என்றால் என்ன
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் பக்கவாதம் வருவதற்கு முன்பு ஏற்படும் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்று தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். அதற்கு முன்பு பக்கவாதம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளலாம். பக்கவாதம் என்பது நம் மூளைக்கு போகும் இரத்த ஓட்டம் தடைப்பட்டு, மூளை மறுபடியும் இயங்குவதற்கு முடியாமல், மூளையின் செல்பகுதிகளை பாதிக்க அடைய செய்கின்றன, இவை எந்த பகுதியை பாதிகின்றதோ, அதை பொறுத்துதான் உடலில் இருக்கும் பாகங்களை இயங்க முடியாமல் செய்வதினால் தான் பக்கவாதம் ஏற்படுகின்றன. மேலும் இவை எப்படி ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்வோம் வாங்க.
சுவாச பிரச்சனை இருந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும்..!
பக்கவாதம் ஏன் வருகிறது.?
பக்கவாதம் பொதுவாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் முக்கியமாக வருகின்றது. மேலும் அவர்களின் குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் அல்லது அவர்களின் குடும்ப வழிகளில் யாருக்காவது இருந்தாலும், இவை தொடர்ந்து வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
குறிப்பாக பக்கவாதம் யாருக்கு ஏற்படும் என்றால் மது அருந்துதல், புகைபிடித்தல், புகை பிடிப்பவர்களின் புகையை சுவாசித்தல் போன்ற பழக்கங்களை கொண்டவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பாக உள்ளது.
மேலும் இந்த பக்கவாதம் பிரச்சனைகள் எந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் என்றால், அதிக ரத்தக் கொழுப்பு, மாரடைப்பு, இதயவால்வு கோளாறுகள், இதயச் செயலிழப்பு, இதயத்துடிப்புக் கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த பக்கவாதம் நோய்கள் வருவதற்கு அடித்தளமாக இருக்கின்றது.
பக்கவாதம் வருவதற்கான அறிகுறிகள்:
பக்கவாதம் நோய் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்றால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான அறிகுறிகள் இருக்கும், ஒரு சிலருக்கு உடல் அல்லது முகத்தில் ஒரு பக்கத்தில் மறதி ஏற்படும். நாம் ஒரு வேலைகளை செய்யும் பொழுது ஒருபக்கம் இழுப்பது போல இருக்கும்.
ஒரு சிலருக்கு பக்கவாதம் ஏற்படும் பொழுது, அவர்கள் நடக்கும் பொழுது காலில் உணர்ச்சிகள் இருக்காது, இதனால் நேராக நிற்கவும், நடக்கவும் முடியாது. அதேபோல் நடந்து செல்லும் பொழுது தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். எனவே இதுபோன்ற அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
இன்னும் ஒரு சிலருக்கு பேசும் வார்த்தைகள் ஒழுங்காக இருக்காது, அதாவது அவர்கள் பேசும் பொழுது குழறுவது போல இருக்கும், அதேபோல மற்றவர்கள் பேசுவதையும் புரிந்துகொள்ள முடியாதது போல இருக்கும்.
பக்கவாதம் அறிகுறிகள் ஒரு சிலருக்கு, அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே அவர்களின் பேச்சுகள் சட்டென்று நின்றுவிடும், கண் பார்வை பிரச்சனைகள் ஏற்படும், அதாவது ஒருவர் இரட்டையாக தெரிவது போல இருக்கும். அதோடு உணவுகளை சரியாக வாய்பகுதிக்கு எடுத்து செல்ல முடியாது, கைகள் மற்றும் உடல் பகுதில் தடுமாற்றம் ஏற்படும்.
மேல் கூறப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரின் ஆலோசனை பெற்று, அதற்கான சிகிச்சையை பெறுவது நல்லது.
குறைந்த இரத்த அழுத்தம் அறிகுறிகள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |