உங்களுக்கு பூச்சி கடித்திருக்கு என்பதை இதை வைத்து கண்டுபிடித்து விடலாம்..

Advertisement

பூச்சி கடி அறிகுறிகள்

பூச்சிகளில் விஷமுள்ள பூச்சி, விஷமற்ற பூச்சி என இருவகையாக உள்ளது. விஷம் உள்ள பூச்சிகள் நம்மை கடித்து விட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில் பெரிய விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். இதை தவிர நாம் அன்றாட வாழ்வில் தினமும் கொசுக்கள், எறும்புகள், பல விஷமற்ற பூச்சிகள் என பல பூச்சி இனங்கள் நம்மை கடிப்பதுண்டு. சில நேரங்களில் பூச்சி கடித்திருக்கா என்பதே தெரியாது, ஆனால் நம் உடலில் அலர்ஜி ஏற்பட்டிருக்கும். நமக்கு பூச்சி தான் கடித்திருக்கு என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்துவிடலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் பூச்சி கடித்ததற்கான அறிகுறிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..

பூச்சி கடித்தற்கான அறிகுறிகள்:

பூச்சி கடி அறிகுறிகள்

பூச்சி கடித்த இடத்தில் வீக்கம் காணப்படும்.

தோல் சிவந்து காணப்படும், அல்லது அரிப்பு ஏற்படும்.

பூச்சி கடித்த இடத்தில் வலி இருக்கும்.

கடித்த இடத்தில் சூடாகவோ அல்லது கூச்சமின்மை உணர்வு காணப்படும்.

பூச்சி கடித்த இடமானது எந்த உணர்வும் இல்லாமல் இருக்கும்.

ஃபைப்ராய்டு கருப்பை கட்டி அறிகுறிகள் என்ன தெரியுமா..?

பூச்சி கடித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அறிகுறிகள்:

காய்ச்சல்

குமட்டல்

வாந்தி

மயக்கம்

குழப்பம்

தசைப்பிடிப்பு

இதயம் வேகமாக துடிக்கும்

உங்களுக்கு பூச்சி கடித்து மேல் கூறப்பட்டுள்ள அறிகுறிகள் இருந்தால் மருத்துமனைக்கு சென்று அதற்கான சிகிச்சைகளை பெற வேண்டும்.

ஆளுமை சீதைவுக்கான அறிகுறிகள் என்ன தெரியுமா

குளவி கடித்தற்கான அறிகுறிகள்:

குளவி கடித்த இடமானது தோல்  சிவந்து காணப்படும், மற்றும் அந்த இடமானது வீக்கமாக காணப்படும்.

கடித்த இடத்தில் வலி அதிகமாக இருக்கும்.

தேன் பூச்சி கடித்தால் அறிகுறிகள்:

தேன் கடித்த இடமானது தோல் சிவந்த நிறத்தில் காணப்படும்.

கடித்த இடம் வெள்ளையாக காணப்படும், மேலும் அரிப்பு ஏற்படும்.

உண்ணி பூச்சி கடித்தால் அறிகுறிகள்:

உண்ணி பூச்சி கடித்த இடத்தில் வீக்கம் காணப்படும்.

இந்தெந்த அறிகுறிகள் இருந்தா அது தொழுநோயாம் அது என்னென்ன அறிகுறிகள் என்று தெரிந்து கொள்ளுங்க

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement