Pooran Kadi Symptoms in Tamil | பூரான் கடி அறிகுறிகள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பூரான் கடித்தால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். பொதுவாக, பூராடம் கடித்தால் விஷத்தன்மை குறைவாகவே இருக்கும். பெரும்பாலும் விஷத்தன்மை இருக்காது என்றே கூறப்படுகிறது. பூரான் கடித்த இடத்தில் அரிப்புகள், சிவந்து போதல் போன்ற பல அறிகுறிகள் இருக்கும்.
வீட்டை நாம் என்னதான் சுத்தமாக வைத்து கொண்டாலும், இரவில் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனால், பெரும்பாலும் இரவில் நாம் அனைவரும் பூச்சி கடிக்கு ஆளாவதுண்டு. பூராடன் கடித்தால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது என்றாலும், குழந்தைங்களுக்கு ஒரு சிலருக்கும் பல ஒவ்வாமை பிரச்சனைகள் ஏற்படும். எனவே, பூச்சி கடித்தால் உடனே அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது நல்லது. அந்த வகையில் பூரான் கடித்தால் என்ன விதமான அறிகுறிகள் இருக்கும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
பூரான் கடிக்கு வீட்டுலேயே சிறந்த பாட்டி வைத்தியம்
பூரான் கடித்தால் அறிகுறிகள்:
- பூரான் கடித்த இடத்தில் அதன் கொடுக்கு இருக்கும். இது செலுசிட்டிஸ் என்னும் நோய் தொற்றை உருவாக்கும்.
- பூரான் கடித்தால் அதன் அறிகுறி உடனே தெரியாது, ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு பிறகே தெரியவரும்.
- பூரான் கடித்த இடத்தில் அதிக தடிப்பும், எரிச்சலும் மற்றும் வீக்கமும் இருக்கும்.
- சில பேருக்கு, பூரானின் விஷக்கடியால், உடலளவில் சில பாதிப்புகள் இருக்கும். அவை, இதயம் சம்பந்தப்பட்டதாகவோ, நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்டதாகவோ, தசைகள் சம்பந்தப்பட்டதாகவோ இருக்கலாம். இவற்றில் ஏதேனும் உங்களுக்கு தோன்றினால் மருத்துவரை அணுகுவது நல்லது.
- மேலும், நெஞ்சு படப்படப்பு, மயக்கம் மற்றும் பதற்றம் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
- பூரான் கடித்தால் பெரும்பாலும், தோல் சிவந்து போதல், அரிப்பு, வீக்கம் மற்றும் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தான் தோன்றும்.
- பூரான் கடித்தால் எதற்கும் மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது. ஏனென்றால், போறான் கடித்த இடத்தில் எரிச்சல், வீக்கம் போன்றவை இருந்தால், டிடி (டெட்டனஸ் டாக்ஸைடு) ஊசி போடுவார்கள். வலியும் வீக்கமும் குறைய அலர்ஜி மாத்திரைகள், வலி நிவாரணிகள் போன்றவையும் கொடுப்பார்கள்.
பூரான் கடித்தால் உடனே செய்ய வேண்டிய முதலுதவி பற்றி தெரிந்துக்கொள்வோம்..!
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |