கர்ப்பிணி பெண்கள் குடலிறக்கம் அறிகுறிகள்
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குடலிறக்கம் அறிகுறிகளை பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பொதுவாக குடலிறக்கம் பிரச்சனைகள் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் ஒரு பிரச்சனையாகும். ஆனால் இதனை முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது. இதனை அலட்சியமாக விடும்பொழுது உடலில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு காரணமாக உள்ளது. மேலும் இந்த பதிவில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குடலிறக்கம் அறிகுறிகளையும், இவை எப்படி ஏற்படுகிறது என்பதை பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
பெண்களே உங்களது உடம்பில் இந்த அறிகுறிகள் மட்டும் இருந்தால் உடனே கவனித்து விடுங்கள்.! |
கர்ப்பகால குடலிறக்கம் என்றால் என்ன.?
பொதுவாக குடலிறக்கம் என்பது அதிக எடையின் காரணமாக ஏற்படுகிறது, ஆனால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் குடலிறக்கமானது கர்ப்பிணி பெண்களின் தொப்புள் அல்லது தொப்புளின் அடிவயிற்றில் ஒரு சிறிய திறப்பு வழியாக இது போன்ற குடலிறக்கம் ஏற்படுகிறது. இது போன்ற காரணங்களினால் கர்ப்பிணி பெண்களுக்கு தொப்புள் குழி பகுதியில் குடலிறக்கம் ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனையின் பொழுது சிகிச்சை பெறுவது அவசியம்.
சில கர்ப்பிணி பெண்களுக்கு ஹெர்னியா என்னும் குடலிறக்கமும் ஏற்படுகிறது இதற்கு காரணம், வயிற்றில் இருக்கும் குடல்கள் நீண்டு செல்வதினால் இது போன்ற குடலிறக்கம் ஏற்படுகின்றன.
ஹெர்னியா குடலிறக்கம்:
ஹெர்னியா குடலிறக்கம் பிரச்சனைகள் பொதுவாக யாருக்கெல்லாம் வரும் தெரியுமா.? அதிகமான உடல் பருமன் கொண்ட பெண்கள், நாள்பட்ட மலசிக்கல் பிரச்சனை, குழந்தை இல்லாமல் அதிக வயதில் கர்ப்பமான பெண்கள், தொடர்ந்து நாள்பட்ட இருமல், முன்னதாகவே தொப்புள் இறக்கம் கொண்ட பெண்கள் இது போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு ஹெர்னியா என்னும் குடலிறக்கம் ஏற்படுகிறது.
ஹெர்னியா அறிகுறிகள்:
பொதுவாக கர்ப்ப காலத்தின் பொழுது ஏற்படும் ஹெர்னியா அறிகுறிகள் எந்தவிதமான அறிகுறிகளும் இருக்காது, ஆனால் ஒரு சில பெண்களுக்கு சில அறிகுறிகள் இருக்கும். அந்தவகையில் கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய தொப்பையை அழுத்தும் பொழுதோ அல்லது உறங்கும் பொழுதோ தொப்புள் பகுதியில் கட்டி இருப்பது போல தோன்றும். இது போன்ற பிரச்சனைகள் இருக்கும் பொழுது தொப்புள் பகுதியில் வீக்கம், தும்மும் பொழுதும், சிரிக்கும் பொழுதும் அதாவது உடலுக்கு அசைவுகள் கொடுக்கும் பொழுது அதிகமான வலிகள் ஏற்படும்.
கர்ப்பகாலம் நெருங்கும் நேரங்களில் ஹெர்னியாவின் அறிகுறிகள் சிலருக்கு குடலில் இருக்கும் இரத்த விநியோகத்தை பாதிப்பதினால் வாந்தி, காய்ச்சல், மலச்சிக்கல், தொப்புள் கட்டி சிவந்த நிலையில் மாறுபடுதல், வயிற்று வலி, வாயு பிரச்சனை, கருமையான நிறத்தில் மலம் போன்ற அறிகுறிகள் அதிக அளவில் ஏற்படும்.
கர்ப்பகால தொப்புள் குடலிறக்கத்தை தடுக்கும் முறைகள்:
- கர்ப்பகாலத்தில் பொழுது அதிகமாக தண்ணீர் குடிப்பது அவசியம்.
- கர்ப்பிணி பெண்கள் அதிகமாக எடை தூக்குவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றல் குடலிறக்கம் பிரச்சனைகளுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
- கர்ப்பிணி பெண்கள் உறங்கும் பொழுது வயிற்று பகுதியை சவுகரியமாக வைத்து கொண்டு உறங்குவது நல்லது.
- முக்கியமாக தும்மல், இருமல் போன்ற நோய் பிரச்சனைகள் இருந்தால் முன்னதாகவே சிகிச்சை பெறுவது நல்லது.
- கர்ப்பிணி பெண்கள் உடல் பயிற்சி செய்யும் பொழுது சுலபமான உடல் பயிற்சியை மேற்கொள்வது நல்லது. எனவே இது போன்ற விஷங்களை கடைபிடித்தால் குடலிறக்கம் பிரச்சனை வராமல் தடுக்கலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |