Pregnancy Symptoms Before Period in Tamil
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒரு தருணம். ஏனென்றால் திருமணம் முடிந்த பிறகு தான் ஒரு பெண்ணிற்கு அனைத்து விதமான பொறுப்புகளும் அதிகரிக்க செய்கிறது. இவ்வாறு இருக்கையில் திருமணம் ஆன சில நாட்களில் அனைவரும் கேட்கும் ஒரு கேள்வி எதுவும் மகிழ்ச்சியான செய்து இருக்கிறதா என்று மறைமுகமாக கர்ப்பமாக இருப்பதை கேட்கும் ஒரு வழக்கம் ஆகும். திருமணம் ஆன பெண்களை பொறுத்தவரை கர்ப்பம் என்பது சில பெண்களுக்கு உடனே இருக்கும், மற்ற சில பெண்களுக்கு சில மாதம், வருடம் என நாட்கள் தள்ளி போகலாம். சில பெண்கள் கர்ப்பமாக இருப்பதை கூட அறியாமல் இருக்கின்றனர். அதனால் தான் இந்த பதிவில் மாதவிடாய் வருவதற்கு முன் கர்ப்பமாவதை உணர்த்தும் அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
மாதவிடாய் வருவதற்கு முன் கர்ப்ப அறிகுறிகள்:
வயிற்று பிடிப்பு:
சில பெண்களுக்கு மாதவிடாய் எப்பொழுதும் வரும் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வயிற்றில் பிடிப்பு ஏற்படும். சில பெண்களுக்கு மாதவிடாய் வரும் தேதிக்கு முன்னே உதிர போக்கு இருக்க கூடும்.
உங்களுக்கு எப்பொழுதும் 28 நாட்கள் வரும் என்றால் சில நேரம் 20 அல்லது 24 நாட்கள் கழித்து மாதவிடாய் வருகிறது என்றால் அவை கர்ப்பத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
அசிடிட்டி பிரச்சனை வருவதற்கான அறிகுறிகள்..
நெஞ்செரிச்சல்:
கர்ப்பம் ஆன பிறகு 2 அல்லது 3 மாதங்களில் தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது என்று நினைக்கிறோம். ஆனால் கரு உருவாகும் போதே இந்த அறிகுறிகள் வெளிப்படுகிறது.
உடல் சோர்வு:
அதிகமான வேலை பார்த்தால் உடல் சோர்வு ஏற்படுவது இயற்கையானது. ஆனால் கருவுறுதலுக்கு முன்பு உடலில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்களால் இரத்தம் அதிகரிக்கும். இதனால் கூட உடல் சோர்வு ஏற்படும்.
குமட்டல் மற்றும் வாந்தி:
கர்ப்பமாவதை உறுதி செய்வதே குமட்டல் தான். கரு உருவாகும் ஆரம்ப காலத்தில் வாந்தி இருக்காது ஆனால் குமட்டல் இருக்கும். இந்த அறிகுறியானது மாதவிடாய் வருவதற்கு முன்னே தோன்றி விடும்.
மலச்சிக்கல்:
கருவுற்ற 5 மாதத்திற்கு பிறகு தான் மலசிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது என்று நினைக்கின்றனர். கரு உருவாகும் போதே மலசிக்கல் பிரச்சனையை சந்திக்கின்றனர். ஏனென்றால் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் ஆரம்பத்திலையே மலசிக்கல் பிரச்சனை ஏற்படுகின்றது.
உடல் வலி:
மாதவிடாய் வந்த பிறகு உடல் வலி ஏற்படுவது இயற்கையானது. ஆனால் மாதவிடாய் வருவதற்கு முன்னே முதுகு வலி, தலைவலி போன்ற பிரச்சனை ஏற்படுகின்றது என்றால் அவை கர்ப்பத்தின் அறிகுறிகளாகும்.
மன அழுத்தம்:
மாதவிடாய் வந்த பிறகு எந்த வேலையும் செய்ய முடியாமல் குழப்பமான மன நிலையில் காணப்படுவது இயற்கையானது. ஆனால் மாதவிடாய் வருவதற்கு 5 நாட்களுக்கு முன்னே மன அழுத்தத்தை உணர்கிறீர்கள் என்றால் அவை கர்ப்பத்தின் அறிகுறியாக இருக்கும்.
வெரிகோஸ் வெயின் நோயின் அறிகுறிகள் என்ன தெரியுமா |
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |