Prostate Cancer Symptoms in Tamil
அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆரோக்கியம் பதிவில் ஆண்களை தாக்கக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த புரோஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் ஆண்களை தாக்குகிறது. இந்த புற்றுநோய் 35 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு ஏற்படுகிறது. இந்த நோய் இருப்பதை சில ஆரம்ப அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். அந்த வகையில் புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..!
வயிற்றில் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் என்ன தெரியுமா.? |
புரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன..?
இது ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் ஓன்று. புரோஸ்டேட் என்பது ஆண்களின் அடிவயிற்றில் காணப்படும் ஒரு சிறிய சுரப்பி. அதாவது, புரோஸ்டேட் என்பது ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் இருக்கும் ஒரு வகை சுரப்பி என்று சொல்லப்படுகிறது.
இது பெரும்பாலும் 35 வயதிற்கு மேல் உள்ளவர்களை பாதிக்கிறது. இனப்பெருக்க மண்டலத்தில் இருக்கும் சுரப்பியில் உள்ள செல்கள் கட்டுப்பாட்டை மீறி வளர ஆரம்பிக்கும் போது இந்த புற்றுநோய் ஏற்படுகிறது.
இந்த புற்றுநோயை Silent killer என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காரணம் இந்த புற்றுநோய் இருப்பதை கண்டறிவது மிகவும் கடினமான ஓன்று. இதன் அறிகுறிகள் சில நாட்கள் சென்ற பிறகே தெரிகிறது. இருந்தாலும் இதை ஒரு சில ஆரம்ப அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். அதை பற்றி பார்ப்போம்.
புரோஸ்டேட் புற்றுநோய் அறிகுறிகள்:
- முதுகு பகுதியில் வலி அல்லது இடுப்பு வலி மற்றும் தொடைகளில் வலி ஏற்படும்.
- பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது.
- அதுபோல ஒரு சிலருக்கு சிறுநீர் கழிக்க சிரமமாக இருக்கும்.
- சிறுநீர் கழிக்கும் போது அதிகமான வலி, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
- சிரிக்கும் போது அல்லது இருமும் போதும், தும்மும் போதும் சிறுநீர் கசிவது போன்ற உணர்வு இருக்கும்.
- அதுபோல சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் வெளியேறுதல்.
இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
வாயில் புற்றுநோய் வருவதற்கான சில அறிகுறிகள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |