Retinal Cancer Symptoms in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே கண்கள் என்பது எவ்வளவு முக்கியம் என்று அன்வருக்குமே தெரியும். அப்படி நமது கண்களில் சிறியதாக ஒரு தூசி விழுந்தாலும் நம்மால் தாங்கி கொள்ள முடியாது. இந்நிலையில் நமது கண்களில் வேறு ஏதேனும் பெரிய பிரச்சனை வந்தால் நம்மால் தாங்கி கொள்ள முடியுமா.! இன்றைய சூழலில் நமது கண்களுக்கு பல வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களை குறி வைத்து கண்களின் பின்புறம் உள்ள விழித்திரையில் ரெட்டினோபிளாஸ்டோமா என்னும் விழித்திரை புற்றுநோய் ஏற்படுகின்றது.
இந்த விழித்திரை புற்றுநோயானது ஒரு கண்ணிலோ அல்லது இரண்டு கண்களிலோ ஏற்படும். மேலும் இது ஒரு அறிய நோயாகும். மேலும் இந்த புற்றுநோயானது ஒருவருக்கு ஏற்பட்டது என்றால் நாளடைவில் உடல் முழுவதையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்த புற்றுநோயினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டீர்கள் என்றால் அதிலிருந்து உங்களை காப்பாற்றி கொள்ளலாம். அதன் ஆரம்ப நிலையை கண்டறிவதற்கு முதலில் உங்களுக்கு இந்த நோய்க்கான அறிகுறிகள் தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் விழித்திரை புற்றுநோய்க்கான அறிகுறிகளை அறிந்து கொள்வோம் வாங்க..!
கண் நரம்பில் பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன
விழித்திரை புற்றுநோய்க்கான அறிகுறிகள்:
விழித்திரை புற்றுநோய்க்கான அறிகுறிகளை நாம் அறிந்திருப்பது மிகவும் அவசியமாகும். இந்த நோயின் அறிகுறிகள் தெரிந்திருந்தால் மட்டுமே அதன் ஆரம்ப நிலையிலேயே தடுத்து உயிரை காப்பாற்றலாம். சரி வாங்க அது என்னென்ன அறிகுறிகள் என்று பார்க்கலாம்.
கண் பார்வையின் நடுவில் வெள்ளையாக வட்டம் தோன்றுதல்
கண்பார்வை குறைதல்
சிறுநீரகம் செயலிழந்து விட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் தெரியுமா
மாறுகண் ஏற்படுதல்
கண்ணின் வெள்ளைப் பகுதி நிறம் மாறுதல்
கண்கள் சிவப்படைதல்
கண்களில் வீக்கம் மற்றும் வலி ஏற்படுதல்
புகைப்படம் எடுக்கும் போது கண்களில் பிளாஷ் ஒளிப்பட்டு, சிகப்பு நிறத்தை பிரதிபலிப்பதற்கு பதிலாக வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும்
சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |