Sciatica Symptoms in Tamil
நம் முன்னோர்கள் காலத்தில் சத்தான உணவை சாப்பிட்டு வந்தார்கள், உணவே மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் மருந்தே உணவாக மாறி விட்டது. நம் அன்றாடம் பல உணவுகள் மற்றும் மாத்திரைகள் சாப்பிட்டு வருவதனால் பல்வேறு நோய்கள் வருகிறது. நமது உடலில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட போகிறது என்றால் முதலில் அறிகுறிகள் தோன்றும். அதனை முதலில் பார்த்து அறிந்து கொள்வது அவசியமாகும். அதனால் இன்றைய பதிவில் சியாட்டிகா நோய் அறிகுறிகளை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
சியாட்டிகா நோய் என்றால் என்ன..?
சியாட்டிகா என்பது முதுகு அல்லது கால்களில் உண்டாகும் கடுமையாக வலியாக உள்ளது. இது பெரும்பாலும் நரம்பின் அழுத்தம் மற்றும் காயத்தால் ஏற்படும் ஒரு விதமான வலியாக இருக்கிறது. இதுவே சியாட்டிகா நோய் எனப்படும்.
சியாட்டிகா நோய் வர காரணம்:
பெரும்பாலும் சியாட்டிகா நோயால் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் முதுகில் வீக்கம், எரிச்சல் மற்றும் நரம்பு சுருக்கம் போன்றவை வலியை ஏற்படுத்தும் முக்கிய காரணமாக உள்ளது. நமது உடலில் இருபகுதிகளிலும் வழுக்கிய வட்டு போன்ற அமைப்பானது முதுகு தண்டுவடத்தில் இருக்கிறது. இதில் அடிபட்டாலோ அல்லது காயங்கள் ஏற்பட்டலோ சியாட்டிகா நோய் வருவதற்கு காரணமாக அமைகிறது.
சியாட்டிகா நோயின் அறிகுறிகள்:
கீழ் முதுகில் வலி:
நமது உடலில் லேசான கூச்ச உணர்வுகள், வலிகள் மற்றும் எரியும் உணர்வு காரணமாக கீழ் முதுகில் வலி ஏற்படுகிறது. அதிலும் சில நேரங்களில் அதிகமாக வலி ஏற்படும். இந்த வலியானது நமது உடலில் ஒரு பக்கமாக மட்டுமே வலியினை ஏற்படுத்தும். மேலும் நம் உடலில் மற்ற இடத்தில் உணர்வு இல்லாமல் செய்து விடும். அதுமட்டுமில்லாமல் இந்த வலியானது இடுப்பு மற்றும் காலில் தான் அதிகமான வரும்.
டிமென்ஷியா என்பது என்ன நோய்.. இந்த நோயின் அறிகுறிகள் என்ன தெரியுமா
கால் பகுதியில் உணர்வு இல்லாமல் இருப்பது:
சியாட்டிகா நோய் ஏற்பட்டால் இரு கால்களும் உணர்வு இல்லாமல் போய் விடும். மேலும் இந்த நோயானது இடுப்புக்கு கீழ் பகுதியில் எந்த விதமான உணர்வுகளையும் ஏற்படுத்தாமல் செய்கிறது.
கால் பகுதியில் கனமாக இருப்பது:
கால் பகுதியை பாதிக்கும் நோயாக சியாட்டிகா நோய் உள்ளது. இந்த நோயானது காலில் வரும் போது கால் கனமாக மாறி விடுகிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு கால் பாதிக்கப்பட்டால் மற்ற கால்களும் பாதிக்கிறது.
உடல் நிலை மாறுதல்:
சியாட்டிகா நோய் இருப்பவர்களுக்கு உடலானது மோசமாக மாறி விடும். அதிலும் இந்த நோய் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களுக்கும் அழுத்தம் கொடுக்கும் போது வலி அதிகமாக ஏற்படும்.
தசைப்பிடிப்புகள்:
சியாட்டிகா நோய் ஏற்பட்டால் தசைப்பிடிப்பு பிரச்சனையும் அதனுடைய அறிகுறிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
| மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |














