மண்ணீரல் புற்றுநோய் அறிகுறிகள் | Spleen Cancer Symptoms in Tamil

spleen cancer symptoms in tamil

மண்ணீரல் புற்றுநோய் அறிகுறிகள் | Spleen Cancer Symptoms in Tamil

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் எண்ணற்ற நோய்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறது. அப்படி நிறைய நோய்கள் வந்தாலும் கூட அதற்கான தக்க மருத்துவமும் அளிக்கும் வகையில் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரையிலும் மிகவும் அதிகமாக நம்மை அச்சுறுத்தி உயிரை பறிக்கிறது என்றால் அது புற்றுநோய் தான். அத்தகைய புற்றுநோயிலும் மார்பக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், வயிறு புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் தொண்டை புற்றுநோய் என நிறைய வகைகள் இருக்கிறன்றன. இதில் நிறைய வகைகள் இருப்பது போல அதற்கான அறிகுறிகளும் வேறுபடுகின்றன. அதனால் இன்று மண்ணீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான காரணம் என்னவென்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

வாயில் புற்றுநோய் வருவதற்கான சில அறிகுறிகள்

மண்ணீரல் புற்றுநோய் என்றால் என்ன..?

symptoms of spleen cancer in tamil

உடலில் உள்ள கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் மாதிரி மண்ணீரலும் ஒரு முக்கியமான உறுப்பாக இருக்கிறது. இத்தகைய மண்ணீரல் அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியினையும் மற்றும் புற்றுநோயை எதிர்க்கும் பண்பினையும் கொண்டுள்ளது. 

இரத்த அணுக்களை சேமிக்கவும் மற்றும் கல்லீரலுக்கு இரத்தத்தை அனுப்பவும் மண்ணீரல் பயன்படுகிறது. இந்த மண்ணீரல் நமது உடலில் உள்ள விலா எலும்பிற்கு பின்னால் அமைந்துள்ளது.

மண்ணீரலை சரியாக இயங்க விடாமல் அதற்கு எதிராக நமது உடலில் உள்ள சில செல்கள் இணைந்து அதனுடைய செயல்திறனையும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்க செய்கிறது. இதுவே மண்ணீரல் புற்றுநோய் ஆகும்.

மண்ணீரல் புற்றுநோய் வருவதற்கான காரணம்:

 பொதுவாக மண்ணீரல் புற்றுநோய் என்பது உடலில் வேறு ஏதோ இடத்தில் புற்றுநோய் வருவதாலும் மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுதலும் மண்ணீரல் புற்றுநோய் வருவதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.  
கல்லீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

மண்ணீரல் புற்றுநோய் அறிகுறிகள்:

மண்ணீரல் புற்றுநோய்

உங்களுடைய உடல் வழக்கம் போல் இல்லாமல் மிகவும் பலவீனமாக இருப்பது போல உணர்வீர்கள் மற்றும் உடல் அதிகப்படியான சோர்வுடன் காணப்படும்.

மண்ணீரல் புற்றுநோய் ஏற்பட்டால் உங்களுக்கு திடீரென உடல் எடை குறைய கூடும். நீங்கள் திடீரென உடல் எடை குறைகிறது என்று அதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

உங்கள் அடி வயிற்று பகுதியில் வலி ஏற்படுதல் மற்றும் வயிறு பசி எடுக்காமல் இருத்தல் ஆகிய அறிகுறிகளும் மண்ணீரல் புற்றுநோயில் அடங்கும்.

உடலில் மண்ணீரல் இருக்கும் அளவு இயல்பாக இல்லாமல் இரண்டு மடங்கு அதிகமான அளவினை கொண்டிருக்கும்.

இரவு நேரத்தில் தூங்கும் போது எப்போதும் அதிகமாக வியர்வை சுரந்து கொண்டிருப்பதும் மண்ணீரல் புற்றுநோயின் அறிகுறியாகும்.

மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் மட்டும் இல்லாமல் அடிக்கடி காய்ச்சல் வருதல் மற்றும் இரத்த சோகை அதிகரித்தல் இதுபோன்ற அறிகுறிகளும் மண்ணீரல் புற்றுநோயில் அடங்கும்.

மேலே கூறியுள்ள அறிகுறிகள் மட்டும் இல்லாமல் வேறு சில அறிகுறிகள் உங்களுக்கு இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகி அதற்கான தக்க சிகிச்சையினை பெற வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..!

 

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil