Stroke Symptoms in Tamil
மூளைக்கு இரத்த ஓட்டம் சரியாக போகவில்லை என்றால் அது ஒரு மூளை பக்கவாதம் (Brain Attack) ஆகும். இதனை ஆங்கிலத்தில் Stroke என்று பொதுவாக மருத்துவர்கள் சொல்வார்கள். பக்கவாதத்தின் பொதுவான அர்த்தம் கை கால்கள் இழுத்துக்கொள்வது (Paralysis) ஆகும். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மூளைக்கு சரியாக இரத்தம் ஓட்டம் போகாமல் இருப்பது. இந்த பக்கவாதத்தில் இரண்டு வகைகள் உள்ளது. ஒன்று மூலையில் இரத்தம் ஓட்டம் தடைபடுவது அதனை ஆங்கிலத்தில் Ischemic Stroke என்று அழைக்கின்றன. மற்றொன்று மூலையில் இரத்தம் கசிவு ஏற்படுவது அதை ஆங்கிலத்தில் Hemorrhagic Stroke என்று அழைப்பார்கள். இவை இரண்டுமே Brain Attack-ஆக தான் பார்க்கப்படுகிறது.
இரத்தம் மூளைக்கு செல்லாத ஒரு சூழ்நிலையில் மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை என்னவென்றால் Stroke-ல் பாதிக்கப்பட்டவர் 4 மணி நேரத்திற்குள் மருத்துவனைக்கு சென்றால். அந்த பிரச்சனையை உடனே சரி செய்துவிடலாம். அந்த சிகிச்சை முறை மருந்து மாத்திரைகள் மூலமாக இருக்கும் அல்லது ஆஞ்சியோ முறையாக இருக்கும். பாதிக்கப்பட்டவரின் தன்மையை பொறுத்து சிகிச்சை முறை வேறுபாடும். ஆனால் இந்த பக்கவாதத்திற்க்கான அறிகுறிகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆக பக்கவாதத்திற்க்கான அறிகுறிகளை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
பக்கவாதம் அறிகுறிகள்
பக்கவாதத்தின் அறிகுறிகளை நாம் தெரிந்து வைத்துக்கொள்வதன் மூலம் சரியான நேரத்தில் சரியான மருத்துவ சிகிச்சையை பெற்றும் பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். இந்த அறிகுறியை நாம் தெரிந்து வைத்துக்கொள்வதன் மூலம் ஒரு உயிரை சரியான நேரத்தில் காப்பாற்ற முடியும். BE FAST என்ற வார்த்தை பயன்படுகிறது. இவற்றில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் பக்கவாதத்தின் ஒவ்வொரு அறிகுறிகளை குறிக்கிறது. சரி வாங்க அந்த அறிகுறியை இப்பொழுது பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் உடலில் இரத்தம் குறைவாக உள்ளதாய் உணர்த்தும் அறிகுறிகள் !
B – Balance – உடல் சமநிலை இழத்தல் அல்லது பலவீனமான கால்கள்
E – Eyes – கண்கள் எதையும் தெளிவாக பார்ப்பதில் சிக்கல்
F – Face – முகம் ஒரு புறமாக இழுத்து கொள்ளுதல் அல்லது உணர்வின்றி போதல்
A – Arms – கைகளை உயர்த்துவதில் சிரமம் அல்லது பலவீனமாக உணர்தல்
S – Speech – பேச இயலாமல் போவது அல்லது வாய் குளறுவது
T – Time – இந்த அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்க்கான உரிய சிகிச்சைகளை பெறவும்.
மற்ற அறிகுறிகள்:
மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் குழப்பம் அல்லது சிக்கல்,
எந்த காரணமும் இல்லாமல் கடுமையான தலைவலி, மயக்கம் போன்றவையும் பக்கவாதத்தின் பிற அறிகுறிகள் ஆகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இதய நோய்கள் வருவதற்கான அறிகுறிகள்!
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |