Symptoms Before Labor Pain in Tamil
பெண்கள் கருவுற்ற நாளில் இருந்து அந்த குழந்தையை நல்லபடியாக பெற்று எடுக்கும் வரை அவர்களுக்கு மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி இருந்துகொண்டே இருக்கும். இருப்பினும் பிரசவ நாள் நெருங்க நெருங்க அவர்களுக்குள் ஒரு பதட்டமும், பயமும் இருக்கும். குறிப்பாக சாதாரணமாக வலி வந்தால் கூட அது பிரசவ வலியாக இருக்குமோ என்று மனதில் ஒரு குழப்பமும், பயமும் இருக்கும். ஒரு வேளை அது சூட்டு வலியாக கூட இருக்கலாம். பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு 8, 9 மாதங்களில் இடுப்பு வலி, முதுகு வலி, கை கால் வலி என்று வருவது சகஜமான விஷயம் தான். சரி இந்த பதிவில் பிரசவ வலிக்கும் சூட்டு வலிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை பற்றி படித்தறிய போகிறோம். சரி வாங்க தொடர்ந்து பதிவை படித்து பயன்பெறலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கர்ப்பமாக இருக்கும் போது செய்யக்கூடாதவை என்ன தெரியுமா?
பிரசவ வலிக்கும் சூட்டு வலிக்கும் உள்ள 3 வித்தியாசங்கள்..! Symptoms Before Labor Pain in Tamil
அறிகுறி: 1
கர்ப்பிணிக்கு ஒரு வலி வருகிறது என்றால், அது பிரசவ வலியாக இருப்பதற்க்கான அறிகுறி எப்படி இருக்கும் என்றால். அந்த வலியானது தொடர்ந்து 5 முதல் 10 நிமிடத்திற்கு ஒரு முறை வலி வந்துகொண்டே இருக்கும். இது பிரசவ வலிக்கான முதல் அறிகுறி.
அறிகுறி: 2
உங்களுக்கு வலி தொடர்ந்து 5 முதல் 10 நிமிடத்திற்கு ஒரு முறை வலி வந்துகொண்டே இருந்து. அந்த வலியின் கால அளவு (Duration) அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது உண்மையான பிரசவ வலி என்று சொல்லலாம்.
அறிகுறி: 3
உங்களுக்கு பிரசவ வலியாக இருக்கும் போது உங்களுக்கு கர்ப்பப்பை வலிக்கலாம், பனிக்குடம் உடைந்து நீர் கசியலாம் அல்லது இரத்த கசிவு ஏற்படலாம். அல்லது உங்களுக்கு மிகவும் அசௌகர்யமாக இருக்கலாம். அதாவது நீங்கள் நார்மலாக அமரமுடியாது, எழுந்திருக்க முடியாது இது போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக அது பிரசவ வலி தான்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்..!
இது தவிர உங்களுக்கு சாதரணமாக வலி இருந்து அதுவும் உங்களால் தாங்கிக்கொள்ளும் அளவிற்கு இருந்தால் அது சூட்டு வழியாக இருக்கும். மேல் கூறப்பட்டுள்ள இந்த மூன்று அறிகுறிகளையும் நீங்கள் தெரிந்துகொண்டிகள் என்றாலே போதும் உங்களுக்கு எது சூட்டு வலி, எது பிரசவ வலி என்று புரிந்துகொள்ள முடியும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |