மயக்கம் வருவதற்கான அறிகுறிகள்..! | Symptoms of Fainting in Tamil
நாம் ஆரோக்கியமாக தான் இருக்கின்றோம் என்று நினைத்து கொண்டிருப்போம். ஆனால் அப்படி நினைத்து கொண்டிருக்கும் பட்சத்தில் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போகிவிடும். ஆனால் நம்முடைய உடல்நிலையை பொறுத்தவரை எந்த பிரச்சனையாக இருந்தாலும் கூட அதற்கான அறிகுறியினை நமக்கு வெளிப்படுத்தும். இத்தகைய அறிகுறிகள் எல்லாம் நமது உடலின் ஏதோ ஒரு வகையான பிரச்சனைக்கு என்று தான் நமக்கு தெரியாமல் போகிவிடுகிறது. அந்த வகையில் மயக்கமும் ஒன்று. அதனால் இன்றைய பதிவில் பலருக்கும் வரக்கூடிய மயக்கத்திற்கான அறிகுறிகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
காச நோய் அறிகுறிகள் |
மயக்கம் என்றால் என்ன.?
நமது மூளைக்கு ஆக்சிஜன் கலந்து இரத்தம் போதுமான அளவு கிடைக்க வேண்டும். ஒரு வேளை அப்படி தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் போகும் போது ஏற்படும் நிலையே மயக்கம் ஆகும்.மயக்கம் வருவதற்கான காரணங்கள்:
நமது உடலில் இரத்த அழுத்தம் குறைந்து காணப்படுவது மயக்கம் வருவதற்கு ஒரு காரணமாக உள்ளது. ஆனால் இத்தகைய காரணமானது பெரும்பாலும் வயதானவர்களுக்கு தான் வருகிறது.
அதுபோல கழுத்தில் ஏதேனும் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் நீண்ட நேரம் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதுபோன்ற நிலை நமது உடலில் காணப்பட்டால் மயக்கம் வருவதற்கு காரணமாக உள்ளது.
இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை மற்றும் அதிகப்படியான பதட்டம் இருந்தாலும் மயக்கம் வரக்கூடும்.
மேலும் அதிகப்படியான உடல் சோர்வு, வெயிலில் நீண்ட நேரம் நடத்தல், உயரமான இடத்திற்கு செல்லுதல் அல்லது பார்த்தல் இதுபோன்ற பிரச்சனைகளும் மயக்கம் வருவதற்கான ஒரு காரணமாக அமைகிறது.
நரம்பு தளர்ச்சி அறிகுறிகள் |
மயக்கம் அறிகுறிகள்:
- அதிகப்படியான உடல் வியர்வை
- மூச்சு விடுவதில் பிரச்சனை
- தலைவலி
- தலைசுற்றல்
- கண் பார்வை மங்கலாக தெரிதல்
- அடிக்கடி கொட்டாவி வருதல்
- குமட்டல்
- உடம்பில் ஊசி குத்துதல் போன்ற இருத்தல்
மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் அனைத்தும் மயக்கம் வருவதற்கான அறிகுறிகளாக சொல்லப்படுகிறது.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |