ஹார்மோன் குறைபாட்டின் அறிகுறிகள்.! | Symptoms of Hormone Deficiency in Tamil

Advertisement

ஹார்மோன் குறைபாடு அறிகுறிகள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஹார்மோன் குறைபாடு அறிகுறிகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஹார்மோன் என்பது நம் உடலில் வெவேறு இயக்கங்களை ஒருங்கிணைக்கும் இரசாயன கூறுகள் ஆகும். ஹார்மோன்கள் நம் இரத்தத்தின் வழியே சென்று உடலில் உள்ள திசுக்கள் மற்றும் உறுப்புக்களின் இயக்கத்திற்கு உதவுகிறது. அப்படி இருக்கும் நிலையில் நம் உடலில் ஹார்மோனின் அளவு குறையும்போது அது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். ஹார்மோன் குறைபாடு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.

ஆனால், வயதாகும்போது ஹார்மோன்கள் சமநிலையை இழக்கின்றன. குறிப்பாக ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் மற்றும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோன்கள் குறைய தொடங்குகின்றன. அப்படி ஹார்மோன்களின் வளர்ச்சி குறையும்போது உடலில் சில அறிகுறிகளை ஏற்படுத்தும். அதனை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Hormone Deficiency Symptoms in Tamil:

ஹார்மோன் குறைபாடு அறிகுறிகள்

  • மாதவிடாய் பிரச்சனைகள்
  • வியர்வை அதிகரித்தல்
  • கர்ப்பத்திற்கான சிக்கல்கள்
  • பால் சுரக்காமல் போதல்
  • தலைமுடி உதிர்தல்
  • தோல் வறட்சியாகுதல்
  • எடை அதிகரித்தல்
    சோர்வு மற்றும் மனஅழுத்தம்
  • தூக்கக் குறைபாடு
  • சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்
  • கண்கள் வறட்சி அடைதல்

குளிர் காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள்..!

Symptoms of Hormone Deficiency in Women in Tamil:

பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோன்கள் குறைய தொடங்கும்போது உடலில் பல அறிகுறிகள் உண்டாகும். அவை பின்வருமாறு:

  • ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள்
  • கடுமையான அல்லது இலேசான மாதவிலக்கு
  • கவலை
  • எண்ண ஓட்டம் தடுமாற்றம்
  • மன அழுத்தம்

Symptoms of Hormone Deficiency in Men in Tamil:

ஆண்களுக்கான டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன்கள் குறையும்போது உடலில் பல்வேறு அறிகுறிகளை ஏற்படுத்தும். அவை பின்வருமாறு:

  • விரைப்புத்தன்மை குறைபாடு
  • விரைப்புத்தன்மையை தக்க வைப்பதில் சிக்கல்
  • நீடித்த சோர்வு
  • தசை வலு இழப்பு
  • கவலை
  • எரிச்சல் உணர்வு
  • உயிர் அணுக்களின் வீரியம் குறைதல்

கருப்பை இறக்கம் இருப்பதை காட்டும் அறிகுறிகள் என்ன..?

ஹார்மோன் குறைபாட்டை குறைக்கும் வழிமுறைகள்:

ஹார்மோன் குறைய தொடங்கும்போது, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். எனவே, ஹார்மோன் குறைபாட்டின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே அறிந்து, அதற்குறிய மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வது நல்லது.

  • மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிகளை அறிந்து மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்.
  • தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
  • சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • சரியான நேரத்தில் முறையான தூக்கம் என்பது மிகவும் அவசியம்.
  • இதுபோன்ற ஆரோக்கியமான வாழ்வியல் நடைமுறைகள் மூலம் மட்டுமே ஹார்மோன் குறைபாட்டை தடுக்க முடியும்.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement