Symptoms of Kidney Failure in Tamil
சிறுநீரகம் என்பது நமது உடலின் மிக முக்கியமான ஒரு உறுப்பு ஆகும். ஆரோக்கியமான சிறுநீரகங்கள் உங்கள் உடலில் கழிவுப் பொருட்களையும் அதிக திரவத்தையும் கட்டமைக்கின்றன. இவை நமது இரத்தத்தில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற உப்புகள் மற்றும் தாதுக்களை சம நிலையில் வைத்து கொள்கின்றன. மேலும் சிறுநீரகங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன, இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகின்றன, மேலும் உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருகின்றன.
இப்படி நமது உடலின் மிக மிக முக்கியமான உறுப்பான சிறுநீரகம் செயலிழந்துவிட்டது என்றால் அது இதயத்தை கூட பாதித்து பக்கவாதம், மாரடைப்பு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தி நமது உயிர் போகும் வாய்ப்புள்ளது. அதனால் சிறுநீரகத்தை மிகவும் பாதுகாத்து வைத்து கொள்ள வேண்டும். சிறுநீரகம் செயலிழந்து போகின்றது என்பதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதற்கு தேவையான சிகிச்சையை அளித்து அதனை பாதுகாத்து கொள்ளலாம். சிறுநீரக செயலிழப்பினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டும் என்றால் அதற்கு முதலில் நமக்கு அதற்கான அறிகுறிகள் தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் சிறுநீரக செயலிழப்பிற்கான அறிகுறிகளை அறிந்து கொள்வோம் வாங்க..!
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா
சிறுநீரக செயலிழப்பிற்கான அறிகுறிகள் என்ன..?
சிறுநீர்ப்பை செயலிழப்பிற்கான அறிகுறிகளை நாம் அறிந்திருப்பது மிகவும் அவசியமாகும். இந்த நோயின் அறிகுறிகள் தெரிந்திருந்தால் மட்டுமே அதன் ஆரம்ப நிலையிலேயே தடுத்து உயிரை காப்பாற்றலாம். சரி வாங்க அது என்னென்ன அறிகுறிகள் என்று பார்க்கலாம்.
கால்களிலோ அல்லது கணுக்கால்களிலோ வீக்கம் உண்டாகிறது என்றால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
அடிக்கடி தலைவலி ஏற்படுவது, பொதுவாக தலைவலி என்பது பல காரணங்களால் ஏற்படும் என்பதால் அலட்சியபடுத்தாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
உடல் முழுவதும் அரிப்பு உணர்வு ஏற்படுவது.
எப்பொழுதும் சோர்வாக உணர்வது.
இரவில் தூக்கமின்மை ஏற்படுவது.
வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகரித்தல்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> சிறுநீரக புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா
பசியின்மை மற்றும் சுவை உணர்வை இழப்பது.
உடல் எடை குறைவது.
தசைப்பிடிப்பு, பலவீனம் மற்றும் உணர்வின்மை ஏற்படுவது.
உங்கள் கை மற்றும் கால் மூட்டுகளில் வலி அதிக ஏற்படுவது.
மனக்குழப்பம் மற்றும் நினைவக பிரச்சினைகள் உண்டாகுவது ஆகியவை சிறுநீரக செயலிழப்புக்கான அறிகுறிகள் ஆகும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> கல்லீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |