உப்பு சத்து குறைந்தால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும்..?

Advertisement

Symptoms of Salt Deficiency in Tamil | உப்பு சத்து குறைந்தால் அறிகுறிகள் 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் உடலில் உப்பு சத்து குறைந்தால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நம் உடல் ஆரோக்கியமாக இருக்க பலவிதமான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சரியான அளவில் இருந்தால் தான் உடலானது எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும். அப்படி நம் உடலிற்கு தேவையான முக்கிய சத்துக்களில் உப்பு சத்தும் ஒன்று.

உடலில் உப்பு சத்து அதிகமாக இருக்கவும் கூடாது குறைவாக இருக்கவும் கூடாது. அப்படி உப்பு சத்து அதிகமாக இருந்தாலும் பல பிரச்சனைகள் ஏற்படும்.அதேபோல், உப்பு சத்து குறைவாக இருந்தாலும் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் உடலில் உப்பு சத்து குறைந்தால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

உப்பு சத்து குறைபாடு என்றால் என்ன.?

உப்பு சத்து குறைந்தால் அறிகுறிகள் 

உப்பு அல்லது சோடியம் குளோரைடு என்பது ண்டாம் உடலிற்கு தேவைப்படும் மிக முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். நாம் உண்ணும் உணவுகளில் இயற்கையகவே உப்பு இருக்கிறது. இருந்தாலும், உணவின் சுவைக்காக சமைக்கும்போது உப்பு போட்டு சமைப்போம். உப்பு ஆனது, நம் உடலின் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த அளவு ஆகியவற்றை பராமரிக்க பயன்படுகிறது. உடலில் எப்போது உப்புச்சத்து குறைவாக இருக்கிறதோ அப்போது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

உடலில் உப்பு நீர் இருந்தால் இந்த அறிகுகள் தோன்றும்.! |

Salt Deficiency Symptoms in Tamil:

உடலில் உப்புச்சத்து குறைந்தால் பின்வரும் அறிகுறிகள் தோன்றும்.

  • வாந்தி மற்றும் குமட்டல்
  • சோர்வு 
  • கோபம் 
  • குறைந்த இரத்த அழுத்தம் 
  • முகம் மற்றும் பாதங்களில் வீக்கம். 
  • மயக்கம்
  • உடல் பலவீனம் 
  • தசைபிடிப்பு 
  • மந்தமான நிலை 
  • தலைவலி 
  • மனநிலை பிரச்சனை 
  • தசை பிரச்சனைகள் 
  • பசியின்மை

இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்தால் உடனே மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை பார்ப்பது அவசியம் அல்லது உடலில் உப்புச்சத்து குறைந்தால் வீட்டில் செய்யக்கூடிய நாட்டு வைத்தியங்களை மேற்கொள்ள வேண்டும்.

மோரில் உப்பு கலந்து குடிப்பதால் இவ்வளவு தீமைகளா..?

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement