வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குழந்தைகளுக்கு டைபாய்டு வருவதற்கான அறிகுறிகள்..!

Updated On: April 7, 2026 5:19 PM
Follow Us:
Symptoms of Typhoid in Kids in Tamil
---Advertisement---
Advertisement

Symptoms of Typhoid in Kids in Tamil

இக்காலத்தில் யாருக்கு என்ன நோய் எப்போது வருகிறது என்றே தெரியவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு வகையான உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகிறது. அப்படி நமக்கு வரும் ஒவ்வொரு நோய்களும் ஒவ்வொரு வகையான அறிகுறிகளை நமக்கு உணர்த்தும். அந்த வகையில் குழந்தைகளுக்கு டைபாய்டு காய்ச்சல் வந்தால் என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Symptoms of Typhoid in Child in Tamil

டைபாய்டு என்றால் என்ன..?

 டைபாய்டு என்பது தொற்று பாக்டீரியா நோயாகும். இது தண்ணீர் மூலம் அல்லது அசுத்தமான உணவு மற்றும் மோசமான சுகாதார நிலைகள் போன்றவற்றினால் பரவுகிறது. 

சால்மோனெல்லா டைஃபி என்ற பாக்டீரியா தான் டைபாய்டு காய்ச்சலை உண்டாக்குகிறது. இது நாம் உண்ணும் உணவு மற்றும் தண்ணீர் மூலம் நம் உடலுக்கு பரவுகிறது.

டைபாய்டு காய்ச்சல் வந்தால் 3 முதல் 4 நாட்கள் வரை நீடிக்கிறது.

மூளை காய்ச்சல் அறிகுறிகள்

குழந்தைகளுக்கு டைபாய்டு வருவதற்கான அறிகுறிகள்..?

டைபாய்டு நோய் அறிகுறிகள் குழந்தைகளை தாக்கிய 7 முதல் 14 நாட்களுக்கு பிறகோ அல்லது நோய் தாக்கிய இரண்டு மாதங்களுக்கு பிறகோ ஏற்படலாம்.

  • பசியின்மை
  • தலைவலி
  • தொண்டை வலி 
  • வயிற்று வலி
  • உடம்பு வலி
  • 104 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது அதற்கு அதிகமான காய்ச்சல்
  • சோம்பேறியாக இருப்பது
  • வாந்தி
  • வயிற்றுப்போக்கு
  • வயிறு அல்லது நெஞ்சு பகுதியில் சிவந்த தடிப்புகள்
  • தொடக்கத்தில் குறைவாக இருக்கும் காய்ச்சல், நாளடைவில் அதிகரிக்கும். காய்ச்சல் அதிகரித்து, 103°F – 104°F வரை செல்லலாம்.
  • குழந்தைகளுக்கு உணவு சாப்பிடும் போது வாந்தி ஏற்படும்.
  • குழந்தை எப்போதும் சோர்வாகவும் பலவீனமாகவும் இருக்கும்.
  • சில குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். மற்ற சிலருக்கு மலச்சிக்கல் இருக்கும்.

குழந்தைகளுக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட காரணம் என்ன..?

டைபாய்டு காய்ச்சல் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படுகிறது. காரணம், அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை உட்கொள்வதால் ஏற்படுகிறது.

மேலும் சாலையோர கடைகளில் உள்ள சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்வது. இது போன்ற பல காரணங்களால் குழந்தைகளுக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது.

வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு கண்டிப்பாக இந்த 5 உணவுகளை மறந்தும் கொடுத்து விடாதீர்கள்..!

குழந்தைகளுக்கு டைபாய்டு வரமால் தடுப்பது எப்படி..?

  • குழந்தைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கொடுக்க வேண்டும்.
  • கைகளை சுத்தமாக வைத்திருத்தல்
  • சுகாதாரமான மற்றும் ஆரோக்கிய உணவுகளை கொடுத்தல்
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now