டைபாய்டு காய்ச்சல் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

Symptoms of Typhoid in Tamil

டைபாய்டு அறிகுறிகள் | Symptoms of Typhoid in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் டைபாய்டு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். டைபாய்டு என்பது ஒரு இரைப்பை குடல் தொற்று ஆகும். இது சால்மோனெல்லா டைஃபி (எஸ். டைஃபி – Salmonella Typhi) என்ற பாக்டீரியாவினால் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை அதிக காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. சுத்தமான நீர் மற்றும் உணவு மூலம் ஒருவர் இந்த பாக்டீரியா தொற்று வர அதிக வாய்ப்புகள் உள்ளது. Salmonella Typhi Bacteria உங்கள் வாய் வழியாக குடலுக்கு செல்கிறது. குடல் வழியாக உங்கள் இரத்த ஓட்டத்திற்கு செல்வதற்கு முன் சுமார் ஒன்றில் இருந்து மூன்று வாரங்கள் வரை நமது குடலுக்குள் அந்த பாக்டீரியா இருக்குமாம். பிறகு இந்த பாக்டீரியா இரத்தத்தில் இருந்து மற்ற திசுக்கள் மற்றும் உறுப்புகளில் பரவி உயிரணுக்கள் உள்ளே ஒளிந்துகொள்ளுமாம். இவற்றில் உங்கள் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு உயிரணுக்களால் கூட கண்டுபிடிக்க முடியாதாம். இந்த டைபாய்டு காய்ச்சலை சரியான சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். இதற்கான சிகிச்சையை பெறாமல் இருந்தால் பிறகு அது உங்களுக்கே பெரிய ஆபத்தை கொடுத்துவிடும்.

இந்த டைபாய்டு காய்ச்சல் உங்களுக்கு உள்ளது என்பதை அறிவதற்கே 7 இருந்து 14 நாட்கள் வரை தேவைப்படும். கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை முறையை மேற்கொள்வது மிகவும் சிறந்தது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் பொழுது என்ன நடக்கும் தெரியுமா.?

டைபாய்டு அறிகுறிகள் – Symptoms of Typhoid in Tamil:

Symptoms of Typhoid in Tamil

 1. தலைவலி
 2. மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு
 3. அதிகப்படியான காய்ச்சல்
 4. சோம்பல்
 5. பசியின்மை
 6. விரிவாக்கப்பட்ட மண்ணீரல் மற்றும் கல்லீரல்
 7. மார்பில் தென்படக்கூடிய ரோஸ் நிற புள்ளிகள்
 8. மாரடைப்பு
 9. வயிற்றுவலி
 10. சோர்வு
 11. அதிகப்படியான குளிர்
 12. பொதுவான உடம்பு வலி மற்றும் பலவீனம்

டைபாய்டு காய்ச்சல் வர காரணம்:

அதிக உணவுகளை உட்கொள்வதாலும் , மலம் கலந்த நீரை தெரியாமல் பருகுவதினாலும் இந்த டைபாய்டு காய்ச்சல் வர காரணமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உயர் இரத்த அழுத்தம் அதிகமானால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா.?

 

இதுபோன்ற மேலும் பலவகையான அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்