Symptoms Of Uterine Prolapse
நண்பர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நாம் வாழும் அவசர உலகம் எவ்வளவு மாறி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். எங்கு பார்த்தாலும் மாசற்ற சூழ்நிலை, துரித உணவுகள் தான் இருக்கின்றன. இதனால் யாருக்கு எப்பொழுது என்ன நோய் வரும் என்று சொல்லவே முடியாது. அப்படி ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதுபோல நமக்கு ஏதாவது உடலில் பாதிப்பு என்றால் அதை எப்படி தெரிந்து கொள்வது. ஏதாவது ஒரு அறிகுறிகளை வைத்து தான் தெரிந்து கொள்வோம். அதுபோல நாம் தினமும் இந்த பதிவின் மூலம் ஒவ்வொரு நோய்க்கான அறிகுறிகளை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று கருப்பை இறக்கம் இருப்பதை காட்டும் அறிகுறிகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
நுரையீரல் செயலிழந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும்
கருப்பை இறக்கம் இருப்பதை காட்டும் அறிகுறிகள் என்ன..?
பெரும்பாலும் இடுப்புத் தளத் தசைகள் மற்றும் தசைநார்கள் கருப்பைக்கு போதுமான ஆதரவை வழங்காமல் பலவீனமடையும் போது கருப்பை இறக்கம் ஏற்படுகிறது. இதன் விளைவாக, கருப்பை கீழே நழுவுகிறது. இதை தான் கருப்பை இறக்கம் என்று சொல்கிறார்கள். கருப்பை இறங்கியிருப்பது முன்பே தெரிந்தால் அதை ஆரம்பத்திலேயே குணப்படுத்தி விடலாம்.
ஆனால் அதை ஆரம்பத்திலேயே கவனிக்க தவறினால் அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படும். அதுபோல கருப்பை இறக்கம் இருப்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். அது என்ன அறிகுறிகள் என்று கீழே காணலாம்.
சிறுநீரகம் செயலிழந்து விட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் தெரியுமா |
- இடுப்பில் கனம் அல்லது இழுத்தல் போன்ற உணர்வு
- சிறுநீர் கசிவு பிரச்சனைகள்
- அடிக்கடி சிறுநீர் கழிப்பது
- குடல் இயக்கத்தில் சிக்கல்
- நீங்கள் ஒரு சிறிய பந்தில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு
- இடுப்பு அல்லது கீழ் முதுகில் அழுத்தம் அல்லது அசௌகரியம்
- பிறப்புறுப்பு திசு தளர்வாக இருப்பது போன்ற உணர்வு
மேலும் இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை பெற வேண்டும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> கல்லீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |