Tongue Cancer Symptoms in Tamil
உலகையே பயமுறுத்தும் நோய்களில் ஒன்று புற்றுநோய். நோயின் தன்மையை அறிவதற்கு முன்னரே உடல் முழுவதும் பரவி விடுகிறது. அதனால் புற்றுநோயின் அறிகுறிகளை தெரிந்து வைத்திருப்பது நல்லது. புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. இந்த பதிவில் நாக்கு புற்றுநோய் அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்ளவோம் வாங்க..
நாக்கு புற்றுநோய் என்றால் என்ன.?
நாக்கின் புற்றுநோய்களில் மிகவும் பொதுவானது நாக்கு திசுக்களின் மேற்புறத்தில், அதாவது தட்டையான செதிள் உயிரணுக்களில் ஏற்படும் புற்றுநோய் வளர்ச்சியாகும். நாக்கு புற்றுநோயை இரண்டு வகைகள் உள்ளது.
வாய் நாக்கு புற்றுநோய் – இந்த வகை புற்றுநோய் நாக்கின் நுனியை பாதிக்கிறது. அதை உடனடியாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம்.
ஹைப்போபார்ஞ்சீயல் நாக்கு புற்றுநோய் – இந்த புற்றுநோய் தொண்டையில், உங்கள் நாக்கின் அடிப்பகுதியில், அதாவது நாக்கு பகுதியில் சில அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளுடன் உருவாகலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது ஆரம்பத்தில் கண்டறியப்படுவதில்லை மற்றும் பொதுவாக கட்டி மிகவும் பெரியதாக இருக்கும்போது கண்டறியப்படுகிறது.
வாயில் புற்றுநோய் வருவதற்கான சில அறிகுறிகள்
நாக்கு புற்றுநோய் ஏற்பட காரணம்:
நாக்கு புற்றுநோயானது பெரும்பாலும் வயதான ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. மது குடிப்பது, புகையிலை, உணவு முறை, வெற்றிலை சாப்பிடுதல் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.
நாக்கு புற்றுநோய் அறிகுறிகள்:
புற்றுநோய் ஆரம்பத்தில் அறிகுறிகளில் நாக்கின் பக்கத்தில் வலி மிகுந்த கட்டி ஏற்படும். கட்டியானது இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.
நாக்கில் வெள்ளை அல்லது சிவப்பு இணைப்பு
நாக்கில் எரியும் உணர்வு
நாக்கில் வலி ஏற்படும்.
நாக்கில் தொடந்து புண்
நாக்கு உணர்வின்மை
எடை இழைப்பு
சோர்வு
வாயில் நாற்றம்
சாப்பிடும் உணவு மென்று சாப்பிட முடியாமல் இருப்பது
நாக்கு புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி.?
புகையிலை மற்றும் வெற்றிலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பழங்களை எடுத்து கொள்ள வேண்டும்.
பற்கள் மற்றும் ஈறுகளை கவனிக்க வேண்டும்.
வயதை பொறுத்து HPV தடுப்பூசி போட்டு கொள்ளவும்.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |