தொண்டையில் சதை வளர்ச்சி இருந்தால் என்ன அறிகுறிகள் ஏற்படும்..?

Advertisement

Tonsils Symptoms in Tamil

அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இந்த காலத்தில் அப்படி இல்லை. சிறிய குழந்தைகளுக்கு கூட உடலில் சில பாதிப்புகள் ஏற்படுகிறது. நாம் இன்றைய நிலையில் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதை விட புதிது புதிதாக நோய்களை தான் கண்டறிந்து வருகின்றோம். அதுபோல இந்த பதிவின் மூலம் ஒவ்வொரு நோய்களுக்கான அறிகுறிகளை பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தொண்டையில் சதை வளர்ச்சி இருந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாட்டு வைத்தியம்..!

டான்சில்ஸ் என்றால் என்ன..? 

Tonsils Symptoms in Tamil

டான்சில் சுரப்பிகள், தொண்டையின் இருபுறமும் அமர்ந்திருக்கும் இரண்டு சிறிய சுரப்பிகள் ஆகும். டான்சில்ஸ் என்பது உங்கள் வாயில் நுழையும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக செயல்படும் நோய்எதிர்ப்பு மண்டலத்தின் முதல் பாதுகாப்பு அமைப்பு ஆகும்.

டான்சில்ஸ் நம் உடலில் தொற்று அடையும் போது, ​​அவை நோய்த்தொற்றை தனிமைப்படுத்தி, உடலில் மேலும் பரவுவதை நிறுத்துகின்றன.

டான்சில்ஸ் ஏற்படுவதற்கான காரணம்:

தொண்டையில் சதை வளர்ச்சி வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதாவது காய்ச்சல், ஜலதோஷம் போன்றவற்றால் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள்.

இந்த நோய்த் தொற்றானது பெரும்பாலும் சிறிய குழந்தைகள் முதல் இளம் வயதினருக்கு ஏற்படுகிறது. இது தொண்டையில் எந்த வலியையும் ஏற்படுத்தாமல் இருக்கும் வரை எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உணவுக்குழாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா..?

டான்சில்ஸ் அறிகுறிகள் என்ன..? 

  1. டான்சில் சுரப்பிகளில் வீக்கம், சிவத்தல் மற்றும் அழற்சி
  2. தொண்டையின் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தை வீக்கம்
  3. தொண்டையில் வலி
  4. விழுங்குவதில் மற்றும் பேசுவதில் சிரமம்
  5. காய்ச்சல் மற்றும் குளிர்வது போன்ற உணர்வு
  6. இருமல் தொடர்ந்து வருவது
  7. நிணநீர் கணுக்களின் வீக்கம்
  8. வாய் நாற்றம்
  9. கீறல் குரல்
  10. தொடர்ந்து தலைவலி
  11. தலை மற்றும் கழுத்து விறைப்பு
  12. காது வலி

தொண்டையில் மேல்கூறிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இந்த நோய்த்தொற்று பரவும் என்பதால் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ வாயில் புற்றுநோய் வருவதற்கான சில அறிகுறிகள்

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement