உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் பொழுது என்ன நடக்கும் தெரியுமா.?

uric acid symptoms in tamil

யூரிக் ஆசிட் | Uric Acid in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் யூரிக் ஆசிட் அதிகரிப்பதினால் ஏற்படும் அறிகுறிகளையும் அதில் இருந்து எப்படி விடுபடுவது என்றும் தெரிந்துகொள்ளலாம். யூரிக் அமிலம் என்பது உடலில் புரதங்கள் உடைக்கப்படும் பொழுது  அதில் இருக்கும் பியூரின் என்ற வேதிப்பொருளானது உடலில் யூரிக் அமிலமாக உடைக்கப்படுகிறது. இவை நாம் உண்ணும் உணவுகளான இறைச்சி, சில வகையான காய்கறி போன்றவற்றில் அதிகரிப்பதற்கு காரணமாக  உள்ளது. மேலும் யூரிக் ஆசிட் அதிகரிக்கும் பொழுது  உடலில் ஏற்படும் பிரச்னைகளை தெரிந்துகொள்வோம் வாங்க.

யூரிக் அமிலம் முற்றிலும் குணமாக சித்த மருத்துவம்..!

யூரிக் அமிலம் அறிகுறிகள் | Uric Acid Symptoms in Tamil

யூரிக் அமிலம் உடலில் அதிகரிக்கும் பொழுது உடலில் உள்ள மூட்டுகள் சிவந்த நிலையில் வீக்கமாகவும், வலியுடனும் காணப்படும். ஒரு சிலருக்கு நீண்ட காலமாக இருக்கும் மூட்டு வலி பிரச்சனைகளின் பொழுது எலும்பு முனைக்கும், தோலுக்கும் இடையில் இருக்கும் திரவ பையில் டோஃபி ஏற்படும்.

யூரிக் அமிலம் அதிகரிக்கும் பொழுது சிறுநீரகத்தில்  சேதங்கள் உண்டாகும். இதனால் சிறுநீரகத்தில் கல் அடைப்பு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீரில் இரத்தம், வயிறு மட்டும் பக்கவாட்டில் அதிகமான வலி ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது.

உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும் பொழுது நீடித்த மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் யூரிக் அமிலம் அதிகமாவதால் ஏற்படுகிறது. இந்த யூரிக் அமிலம் மிகவும் அதிகமாக ஏற்படும் பொழுது கீழ்வாதத்தை ஏற்படுத்துகிறது.

யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

யூரிக் அமிலத்தை தடுப்பதற்கு ஒரு சில வழிமுறைகள் உள்ளன. இந்த பிரச்சனையில் இருந்து தீர்வு அடைய வேண்டும் என்றால்  உணவுகள் மிகவும் அவசியம். அந்த வகையில் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.

யூரிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகள்:

யூரிக் அமிலத்தின் அளவு உடலில் அதிகமாக இருக்கும் பொழுது இறைச்சி வகைகளான கோழி, வான்கோழி, பன்றி, மீன்கள் போன்ற கடலில் இருக்கக்கூடிய பிறவற்றையும் முழுமையாக தவிர்ப்பது நல்லது. இதனை அதிகமாக சாப்பிடும் பொழுது உடலில் பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்துவதற்கு காரணமாக உள்ளது.

யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும் பொழுது பேக்கரி போன்ற கடைகளில் அதிகமாக விற்கப்படும் கேக் போன்ற பேக்கரி பொருட்களை சில நாட்களுக்கு தவிர்ப்பது நல்லது.

தயிரில் அதிகமாக புரதங்கள் இருப்பதால் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கு பொழுது கட்டாயம் தவிர்ப்பது நல்லது. தயிரை அதிகமாக சேர்க்கும் பொழுது அதில் டிரான்ஸ் ஃபேட் உடலில் இருக்கும் யூரிக்கை  அதிகரிக்க செய்கிறது. அதோடு ஆல்கஹால்  அதிகம் காணப்படும் மது பானங்களை தவிர்ப்பது நல்லது.

மேலும் இதில் உள்ள உணவுகளை தவிர்ப்பதினால் யூரிக் அமிலம் குறைவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்