Uterus Infection Symptoms in Tamil
மனிதனுக்கு ஆரோக்கியம் என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் உணவு முறை காரணமாக பல நோய்கள் ஏற்படுகிறது. ஒரு நோய் நமக்கு ஏற்பட போகிறது என்றால் அதனை முன்கூட்டியே அறிகுறிகளாக நமக்கு காண்பிக்கும். இவை ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு அறிகுறிகள் இருக்கும். அதை பற்றி நாம் தெரிந்திருக்க வேண்டும் அப்போது தான் நோய்களை எளிமையான முறையில் சரி செய்யலாம். பெண்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை கருப்பையை வைத்து கண்டுபிடித்து விடலாம். பெண்களுக்கு கருப்பையில் எந்த விதமான பிரச்சனையும் இல்லையென்றால் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். அதனால் இந்த பதிவில் கருப்பையில் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..
கருப்பை தொற்று என்றால் என்ன.?
கருப்பை தொற்றை எண்டோமெட்ரிசிஸ் என்றும் அழைப்பார்கள். இவை கருப்பையில் உட்பகுதியில் ஏற்படும் வீக்கம் மற்றும் அரிப்பு ஏற்படுவதை குறிக்கிறது.
ஃபைப்ராய்டு கருப்பை கட்டி அறிகுறிகள் என்ன தெரியுமா..?
கருப்பை தொற்று அறிகுறிகள்:
கருப்பை தொற்றின் அறிகுறியாக வயிற்றின் அடிப்பகுதியில் காரணமே இல்லாமல் வீக்கம் ஏற்பட்டு அதனோடு வலியும் ஏற்பட்டால் கருப்பையில் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது இயல்பான ஒன்று, அதுவும் மாதவிடாய் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வெள்ளைபடுதல் அறிகுறியாக தோன்றும். வெள்ளைப்படுதலானது மஞ்சள் நிறத்துடனும், அதிலிருந்து துர்நாற்றம் ஏற்பட்டால் கருப்பையில் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
மாதவிடாய் நேரத்தில் இரத்தபோக்கு ஏற்பட்டால் இயல்பானது. ஆனால் சாதரண நேரத்தில் கூட இரத்தம் போக்கு ஏற்பட்டால் கருப்பையில் தொற்று இருப்பதற்கான அறிகுறிகளாகும்.
நீங்கள் ஆரோக்கியமாக உணவை சாப்பிட்டாலும் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் கருப்பையில் தொற்று அறிகுறிகளாகும்.
காரணமே இல்லாமல் திடீரென காய்ச்சல் ஏற்பட்டால் அவை கருப்பையின் தொற்று இருப்பதற்கான அறிகுறிகளாகும்.
அதுமட்டுமில்லாமல் நீங்கள் எப்பொழுதும் சோர்வாகவும், பலவீனமாகவும் இருக்கின்றீர்கள் என்றால் உங்களுக்கு கருப்பையில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
உங்களுக்கு மலம் கழிக்கும் போது வலி ஏற்பட்டாலோ அல்லது முழுமையாக மலம் கழிக்காதது போல் உணர்வு ஏற்பட்டாலோ கருப்பையில் தொற்றுகள் வளர்ந்து கொண்டிருக்கிறது.
கருப்பை பிரச்சனை அறிகுறிகள்:
- கருப்பையில் வலி
- மாதவிடாய் சரியாக வராமல் இருப்பது
- வயிறு வீக்கம்
- மலச்சிக்கல்
- உடல் சோர்வு
- காய்ச்சல்
- சிறுநீர்ப்பை தொற்று
- அதிகமாக சிறுநீர் கழித்தல்
அடிவயிற்று வீக்கம்:
மாதவிடாய் காலத்தில் இரத்தம் கசிந்தால் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால், சாதாரண நாட்களில் திடீரென்று யோனியில் இருந்து இரத்தம் கசிந்தால், அது கருப்பையில் தொற்று இருக்க வாய்ப்புள்ளதைக் குறிக்கிறது.
வெள்ளைப்படுதல்:
அசாதாரணமாக யோனியில் இருந்து வெள்ளை அல்லது மஞ்சள் நிற திரவம் வெளிவருவதோடு, கடுமையான துர்நாற்றத்துடன் இருந்தால், அதுவும் கருப்பை உள் அழற்சிக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். எனவே கவனமாக இருங்கள்.
மலச்சிக்கல்:
ஆரோக்கியமான டயட்டை மேற்கொண்டும், மலச்சிக்கலை சந்தித்தால், செரிமான மண்டலம் சரியாக இயங்குவதில்லை என்று அர்த்தம். மேலும் இதுவும் கருப்பை தொற்று இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
கடுமையான காய்ச்சல்:
எந்த ஒரு காரணமும் இல்லாமல், திடீரென்று உடலின் வெப்பநிலை அதிகரித்து கடுமையான காய்ச்சல் வந்தால், உடலினுள் ஏதோ கிருமிகள் நுழைந்துள்ளது என்று அர்த்தம். அதிலும் மேலே கொடுக்கப்பட்ட அறிகுறிகளுடன் காய்ச்சல் வந்தால், அது கருப்பை தொற்று இருப்பதற்கான அறிகுறியாகும்.
உடல் சோர்வு:
எந்நேரமும் மிகுந்த களைப்பையும், பலவீனத்தையும் உணர்கிறீர்களா? எந்த ஒரு செயலிலும் ஈடுபட முடியாமல் மிகுந்த அசௌகரியத்தை உணர்கிறீர்களா? அப்படியெனில் உடலினுள் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.
கருப்பை இறக்கம் இருப்பதை காட்டும் அறிகுறிகள் என்ன..?
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |