பெண்களே உங்களது உடம்பில் இந்த அறிகுறிகள் மட்டும் இருந்தால் உடனே கவனித்து விடுங்கள்.!

uterus problem symptoms in tamil

கருப்பை பிரச்சனை அறிகுறிகள்

பெண்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை அவர்களின் முகத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். அவரின் முகத்தை வைத்து எப்படி கண்டுபிடிக்கலாம் என்ற கேள்வி இருக்கும். ஒருவர் சந்தோஷமாக இருக்கிறார்கள், கவலையாக இருக்கிறார்கள் என்பதை முகத்தை வைத்தே கண்டுபிடிக்கிறோம் அல்லவா..! அதே போல தான் பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை என்றால் அவர்களின் முகமே காட்டி கொடுத்து விடும். பெண்களுக்கு கருப்பை ஆரோக்கியமாக இருந்தால் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று அர்த்தமாம்.

நாம் அனைவரும் செய்ய கூடிய தவறு என்னவென்றால் பிரச்சனை வந்த பிறகு அதை எப்படி செய்யலாம் என்று தான் யோசிப்போம். ஆனால் உடலில் பிரச்சனை வருவதற்கு முன் சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்து விடலாம். ஆனால் அந்த அறிகுறி யாருக்கும் தெரிவதில்லை. அப்படியே எதாவது உடம்பில் பிரச்சனை ஏற்பட்டாலும் மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்டு மருந்து மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள். அந்த மருத்துவரிடமும் பிரச்சனையை சரியாக சொல்வதில்லை. அதனால் எல்லாம் நோய்களையும் அறிகுறிகள் வைத்து கண்டுபிடித்து விடலாம். அதனால் இன்றைய பதிவில் கருப்பையில் பிரச்சனை உள்ளது என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்து விடலாம். அது என்னென்ன அறிகுறிகள் என்று படித்து தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ கருப்பையை பிரச்சனைகளை சரி செய்ய இந்த 3 பழங்கள் போதும்.!

வயிறு வீக்கம் காரணம்:

பெண்களுக்கு அடி வயிற்று வலி, வயிறு பெரிதாக இருப்பது போல் உணர்ந்தால் கருப்பையில் பிரச்சனை ஏற்படுவதற்கான அறிகுறியாகும். எடை அதிகரிப்பதற்கும், வயிறு மட்டும் வீக்கமாக இருப்பதற்கும் வேறுபாடு உள்ளது. வயிறு பகுதியை கனமாக உணர்ந்தால் கவனித்து விடுங்கள்.

வயிறு இறுக்கம்:

உங்களது வயிறு எப்பொழுதும் சாப்பிட்டது போல் உணர்வை கொடுத்தால் அதை கவனிக்க வேண்டும். வயிறு எப்பொழுதும் நிரம்பியது போல் இருப்பதையும், கனமாக இருப்பதையும் உணர்ந்தால் கருப்பையில் பிரச்சனை ஏற்படுவதற்கான அறிகுறிகளாக இருக்கும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்:

உங்களுக்கு சிறுநீர் கழிப்பது போல் தோன்றி கொண்டே இருந்தாலும் கருப்பையில் பிரச்சனை உள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள். சில நேரங்களில் சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தாலும் கவனிக்க வேண்டும். கருப்பை வாயில் எதாவது கட்டி இருந்தால் தான் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

முதுகு வலி காரணங்கள்: 

உங்களுக்கு எதாவது ஒரு நாள் முதுகு வலி, கால் வலி பிரச்சனை ஏற்பட்டால் பயப்பட தேவையில்லை. ஆனால் அந்த வலிகள் தொடர்ந்து வலிக்கும் போது கவனிக்க வேண்டும். கருப்பையில் எதாவது கட்டி இருந்து அதனுடைய வளர்ச்சி அதிகமானால் முதுகு வலி மற்றும் கால் வலி பிரச்சனை ஏற்படும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Natural health tips in tamil