வாதம் அதிகமானால் அறிகுறிகள்

Advertisement

வாதம் அறிகுறிகள் | Vatham Symptoms in Tamil

Vatham Symptoms in Tamil – வணக்கம் நண்பர்களே.. மனித உடலில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடிகள் உள்ளன. இந்த மூன்றில் எது சமநிலை அற்று இருக்கிறதோ அது தொடர்பான நோய்கள் ஏற்படும். அந்த வகையில் வாதம் என்பதும் காற்று தொடர்பானது. சித்த மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் போன்றவற்றில் மனிதனின் நாடி துடிப்பை வைத்து என்ன நோய் என்பது கண்டறியப்படுகிறது. உடலில் வாத நாடிகள் குறைவாகவோ, மிகிதியாகவோ காணப்படும்பொழுது வாதம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. இந்த வாத நோய்களில் 80-க்கும் மேற்பட்ட நோய்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

வாதம்:

உடல் குளிச்சியாக இருந்தல், ஆரோக்கியமற்ற உணவு முறை, அதிக வேலைப்பளு, உடற்பயிற்சி இன்மை போன்ற பல வகையான காரணங்களினால் இந்த வாதம் நோய் ஏற்படுகிறது.

உடலில் எலும்பு மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான செயல்பாடுகளையும், உடல் கழிவுகள் சரியாக வெளியேற்றும் தன்மையையும் வாத நாடி கவனித்துக்கொண்டிருக்கும்.

வாதம் நோய் உடலில் தொடர்ந்து சமநிலையற்று இருக்கும் போது மற்ற இரண்டு நாடிகளான பித்தம் மற்றும் கபம் நிலையையும் பாதிக்கிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஃபைப்ராய்டு கருப்பை கட்டி அறிகுறிகள் என்ன தெரியுமா..?

வாதம் அதிகமானால் அறிகுறிகள் – Vatham Symptoms in Tamil:

உடலில் வாதம் சமநிலையற்று இருக்கும் பொழுது உடலில் அதிக குளிர்ச்சியை உணருதல், தோளில் வறட்சி மற்றும் சுருக்கம் ஏற்படுதல், உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுதல், வாய்வு தொல்லை, மலச்சிக்கல், அஜீரணம், அடிவயிற்றில் உப்புசம், தூக்கமின்மை, உடல் சோர்வு, தலைச்சுற்றல், பதட்டம், அமைதியின்மை, காரணம் இல்லாமல் அதிக பயம் ஏறுபடுதல், குழப்பம், மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலி ஏறுபடுதல், முதுகு வலி போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகள், பக்கவாதம், கீல்வாதம், இரத்த அழுத்தம், மூளை தொடர்பான நோய்கள், இதய நோய்கள் போன்ற பாதிப்புகள் போன்ற பாதிப்புகள் வாதம் சீரற்ற நிலையால் ஏற்படுகின்றன.

முக்கியமான அறிகுறியாக பார்க்கும் பொழுது மூட்டு வலி, மூட்டு வீக்கம், விறைப்பு தன்மை இந்த மூன்றையும் முக்கியமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ஆக இந்த அறிகுறிகள் உங்களுக்கு தொடர்ச்சியாக இருந்தால் கண்டிப்பாக மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்.

வாதம் குறைய வழிகள்:வாதம்

உடலில் வாத நாடியை சமநிலையில் வைத்துக்கொண்டால் பலவிதமான நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.

ஆக இந்த வாத நோய்கள் குணமாக்குவதற்கு முடக்கத்தான் மூலிகையால் செய்யப்பட்ட மூலிகைகள் மற்றும் அதனுடைய தைலத்தை பயன்படுத்தலாம்.

மேலும் புதினா, வாதநாராயணன் தைலம், அஸ்வகந்தா என்று அழைக்கப்படும் அமுக்கரா கிழங்கு சூரணம், திரிபலா மற்றும் திரிகடுகம் சூரணம் போன்றவை வாதம் நோய்க்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

மேலும் மது, புகைபிடிக்கும் பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இது தவிர தினமும் மூச்சு பயிற்சி, யோகா, நடை பயிற்சி, சூரிய நமஸ்காரம் போன்றவற்றை செய்வதன் மூலம் உடலில் வாத நாடியை சீராக வைத்துக்கொள்வதற்கும், வாத நோய்களை குறைப்பதற்கும் பயன்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்தெந்த அறிகுறிகள் இருந்தா அது தொழுநோயாம் அது என்னென்ன அறிகுறிகள் என்று தெரிந்து கொள்ளுங்க..!

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement