வயிற்றில் பூச்சி இருந்தால் அறிகுறிகள் | Vayitril Poochi Symptoms in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வயிற்றில் பூச்சி இருந்தால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதையும் (Vayitril Poochi Symptoms in Tamil) வயிற்றில் பூச்சி இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விவரித்துள்ளோம். பொதுவாக வயிற்றில் பூச்சி இருக்கும் பிரச்சனை அனைவருக்கும் இருக்கும். இதனை நாம் ஆரம்ப காலகட்டத்திலே அறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
வயிற்றில் பூச்சி இருந்தால் நமக்கு முன்கூட்டியே ஒரு சில அறிகுறிகள் இருக்கும். அந்த அறிகுறிகள் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப சிகிச்சையை பெறுவதன் மூலம் வயிற்றில் உள்ள பூச்சிகளை எளிதில் அகற்றலாம். அதுவே நாம் கவனிக்காமல் வைத்து இருந்தோமானால் நாளடைவில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இது தான் வயிற்று போக்கின் அறிகுறிகளா..?
Vayitril Poochi Symptoms in Tamil:
- வயிற்றில் பூச்சிகள் இருந்தால் வயிற்று வலி, வாந்தி குமட்டல் போன்ற பிரச்சனைகள் அதிகமாக தோன்றும்.
- வயிற்றில் எரிச்சல், அரிப்பு, வலி மற்றும் அழற்சி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். முக்கியமாக அடிவயிற்றில் அதிகமான வலியை ஏற்படுத்தும்.
- செரிமான பிரச்சனையை உண்டாக்கும். வயிற்றில் அதிக அளவில் குடல் புழுக்கள் இருந்தால் ஒழுங்காக செரிமானம் ஆகாது. அதேபோல், அடிக்கடி வயிற்றுப்போக்கினை ஏற்படுத்தும்.
- மலப்புழையில் அரிப்பு, எரிச்சல் மற்றும் குடைச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- வயிற்றில் பூச்சிகள் அதிகமாக இருந்தால், உடல் எப்போதும் சோர்வாகவும் பலவீனமாகவும் இருக்கும். பூச்சிகள், உடலில் உள்ள சத்துக்களை உறிஞ்சி ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.
- முக்கியமாக, வயிற்றில் பூச்சி இருந்தால் எடை இழப்பு ஏற்படுகிறது. பசி அதிகமாக இருக்கும். அதற்கேற்ப சாப்பிட்டாலும் உடலில் தாங்காமல் உடல் எடை குறையக்கூடும்.
- வற்றில் புழுக்கள் இருந்தால் மன இறுக்கம் ஏற்படும்.
- முக்கியமாக, இரத்தசோகை பிரச்சனைகள் ஏற்படும். வயிற்றில் உள்ள உருளைப்புழுக்கள், பென்சில்வேனியா போன்றவை உடலில் உள்ள வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்ற சத்துக்களை உறிஞ்சி இரும்புச்சத்து குறைபாட்டை உண்டாக்கும். இதனால் இரத்தசோகை உருவாகும்.
- பெரியவர்களுக்கு வாயு தொல்லை போன்றவையும் ஏற்படும்.
இரத்த சோகை அறிகுறிகள் மற்றும் காரணங்கள்..!
வயிற்றில் பூச்சி இருந்தால் என்ன செய்ய வேண்டும்:
பாகற்காயை அரைத்து ஜூஸ் செய்து, அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டு வருவதன் மூலம் வயிற்றில் பூச்சி இருந்தால் அழிந்து விடும்.
வேப்பிலை ஆனது வயிற்றில் உள்ள பூச்சிகளை அளிக்கும் தன்மை கொண்டது. ஆகையால், வேப்பிலை சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வயிற்று பூச்சி நீங்கும்.
ஒமத்தை வாயில் போட்டு மென்று அரைத்து சாப்பிடுவதன் மூலம் வயிற்று பூச்சி நீங்கும். அதுவே குழந்தைகளுக்கு கொடுக்கும்போது ஓமத்தை பொடியாக்கி பேஸ்ட் போல் செய்து அதில் சிறிதளவு வெல்லம் சேர்த்து உருண்டையாக கொடுக்கலாம்.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |