வேர்க்குரு அறிகுறிகள்
வெயில் காலம் வந்தாலே வீட்டிலும் இருக்க முடியாது, வெளியிலும் செல்ல முடியாது அந்த அளவிற்கு வெயிலின் தாக்கமானது அதிகமாக தான் இருக்கும். மேலும் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அம்மை, வேர்க்குரு போன்ற பிரச்சனைகள் வரும். இதனை சரி செய்வதற்கு மருந்து, மாத்திரைகள் எடுத்து கொள்வார்கள். ஒரு பிரச்சனை வந்த பிறகு அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிப்பதை விட அவற்றை ஆரம்பத்திலேயே பார்த்தால் சரி செய்யலாம்.
ஏனென்றால் ஒரு பிரச்சனை வந்த பிறகு பார்த்தால் அதனை சரி செய்வதற்கு நாட்களாகும். அதுவே பிரச்சனை ஆரம்பிக்கும் போதே அதனை பார்த்து விட்டால் சீக்கிரம் குணப்படுத்திவிடலாம். அதனை எப்படி ஆரம்பத்திலையே கண்டறியலாம் என்றால் அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். நம்முடைய பதிவில் ஒவ்வொரு நோய்க்கான அறிகுறிகளை பதிவிட்டுள்ளோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வேர்க்குரு அறிகுறிகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
வேர்க்குரு என்றால் என்ன.?
வேர்க்குரு என்பது வெயில் காலத்தில் ஏற்பட கூடிய ஒன்றாக இருக்கிறது. அதிகப்படியான வெப்பம் காரணமாக உடலில் சிவந்த புள்ளிகளாக தோன்றும். இவை பொதுவாக சருமத்தில் ஏற்படும் பிரச்சனையாக இருக்கிறது. இதனை ஆரம்பத்திலேயே பார்த்தால் சீக்கிரம் சரி செய்யலாம். இல்லெயென்றால் உடல் முழுவதும் பரவி விடும். சரி வாங்க இதற்கான அறிகுறிகளை அறிந்து கொள்வோம் வாங்க..
வேர்க்குரு அறிகுறிகள்:

வேர்க்குரு வருவதற்கு முன் பல பிரச்சனையை ஏற்படுத்தி தான் அவை வேர்க்குரு கொப்பளங்களாக மாறுகின்றது. இந்த கொப்பளங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் வேர்க்குருவை சீக்கிரமாக குணப்படுத்தலாம். அதனால் கீழே வேர்குருவிற்கான அறிகுறிகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
- முதலில் சருமத்தில் சிவப்பு நிற புள்ளிகளாக தோன்றும்.
- தோலின் மேல்பகுதியில் சிறிய சிறிய மொட்டுகளாக தோன்றும்.
- சருமத்தில் அதிகமாக அரிப்பு ஏற்படும்.
- நீங்கள் அணிந்திருக்கும் ஆடையானது எப்போதும் இல்லாமல் ஒரு விதமான அசெளகரியத்தை உண்டாக்கும்.
- சருமம் ஆனது சொரசொரப்பை ஏற்படுத்தும்.
வேர்க்குரு வராமல் தடுக்க:
- வேர்க்குரு வராமல் தடுப்பதற்கு முதலில் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
- காட்டன் ஆடைகளை இறுக்கமாக அணியாமல் தளர்வாக அணிய வேண்டும்.
- வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
- உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் குளிர்ச்சியான பழங்கள் மற்றும் குளிர்ந்த நீரில் இரண்டு முறை குளிக்க வேண்டும்.
வேர்க்குரு வர காரணம்:
- உடலில் அதிகமான வெப்பத்தால் வரலாம்.
- வியர்வை ஆனது வெளியேறாமல் உடலி கொப்பளங்கள் வரக்கூடும்.
- தூசி, அழுக்கு, வியர்வை போன்ற அனைத்தும் சேர்ந்தும் கூட வியர்வை வரலாம்.
- அதிக நேரம் வெயிலில் நின்று வேலை பார்ப்பவர்களுக்கு வேர்க்குரு வரலாம்.
- உடற்பயிற்சி செய்யும் போது வியர்வை அதிகமாகி வேர்க்குரு ஏற்படும்.
| மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |














