வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் | Viral Fever Symptoms in Tamil..!
நம்முடைய உடல் ஆனது பல விதமான செல்கள் மற்றும் உடல் உறுப்புகளால் தான் இயங்கி கொண்டிருக்கிறது. இத்தகைய சாதாரணமான இயக்கத்தில் திடீரென்று ஏதோ பிரச்சனைகள் ஏற்பட்டாலோ அல்லது உடல் நலக்குறைபாடுகள் ஏற்பட்டாலோ அதனை நம்முடைய உடல் ஆனது அறிகுறிகள் மூலமாக தான் வெளிபடுத்துகிறது. அறிகுறிகளை பொறுத்தவரை ஒவ்வொரு விதமான குறைபாடுகளுக்கும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டு காணப்படுகிறது. ஏனென்றால் ஒரு நோய்களில் எண்ணற்ற வகைகள் இருப்பதால் அதற்கு ஏற்றவாறு அறிகுறிகளும் அமைகிறது. அந்த வரிசையில் இன்று பலருக்கும் வரக்கூடிய வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்னென்ன என்பது பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
வைரஸ் காய்ச்சல் என்றால் என்ன.?
பொதுவாக காய்ச்சல் என்பது நம்முடைய உடல் ஆனது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்கு எதிராக செயல்படும் போது வருகிறது. ஆனால் வைரஸ் காய்ச்சல் என்பது அலர்ஜி, சளி மற்றும் தும்மல் என இதுபோன்ற காரணங்களினால் ஏற்படும் காய்ச்சல் முறையே வைரஸ் காய்ச்சல் எனப்படும்.
மேலும் மலேரியா, டெங்கு மற்றும் சிக்கன் கொன்யா என இதுபோன்ற தொற்றுகளினாலும் வைரஸ் காய்ச்சல் பெரிதளவில் ஏற்படுகிறது.
வைரஸ் காய்ச்சல் வர காரணம்:
நம்முடைய உடலின் மேற்பரப்பில் வழியே வைரஸ் தொற்றுகள் ஆனது செல்களுக்குள் நுழைகிறது. இதனால் செல்கள் வழியாக தொற்றுகள் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் பரவ ஆரம்பி வைரஸ் காய்ச்சலை உண்டாக்குகிறது.
மேலும் நமக்கு அருகில் ஒருவர் தும்மல், இருமல் மற்றும் அலர்ஜி இதுபோன்ற செயல்களை செய்தார்கள் எனில் இதுபோன்ற காரணங்களினாலும் அருகில் உள்ளவருக்கு வைரஸ் காய்ச்சல் வர காரணமாக அமைகிறது.
வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள்:
- உடலில் வியர்வை
- தலைவலி
- தசைவலி
- உடலில் குறைந்த நீர்சத்து
- உடல் சோர்வு
- பசியின்மை
- திடீரென்று உடல் குளிருதல்
- வாந்தி அல்லது குமட்டல்
- வறட்டு இருமல்
மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் அனைத்தும் 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக காணப்பட்டால் அது வைரஸ் காய்ச்சலை குறிக்கும் அறிகுறியாக காணப்படுகிறது.
டைபாய்டு காய்ச்சல் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |