Vitamin And Mineral Deficiency Symptoms
நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ரொம்ப முக்கியமானது. இப்படி முக்கியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் நம் உடலில் குறையும் போது சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். அது என்னென்ன அறிகுறிகள் என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
உடலில் வைட்டமின் மற்றும் மினரல்ஸ் குறைவதற்கான அறிகுறிகள்:
வைட்டமின் சி அறிகுறிகள்:
நீங்கள் கடினமான பொருட்கள் சாப்பிடும் போதோ அல்லது பல் துலக்கும் போது பற்களில் இரத்தம் வந்திருக்கிறதா. அப்படி என்றால் உங்களது உடல் வைட்டமின் சி குறைவாக உள்ளது.
கால்சியம் குறைபாடு அறிகுறிகள்:
நீங்கள் உட்காரும் போது அல்லது எந்திருக்கும் போது கால்களிலிருந்து சத்தம் வந்திருக்கிறதா.. அப்படி என்றால் கால்சியம் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
வைட்டமின் குறைபாடு அறிகுறிகள் & அதற்கான உணவுகள்..!
பயோட்டின் குறைபாடு:
உங்களது நகம் ஓரளவிற்கு வளர்ந்ததும் அதுவாகவே உடைந்தால் பயோட்டின் அளவு குறைவாக உள்ளது.
சிங்க் குறைபாடு:
உங்களின் நகத்தின் ஓரத்தில் வெள்ளையாக இருக்கிறது என்றால் சிங்க் குறைவாக இருப்பதற்கான அறிகுறிகளாகும்.
வைட்டமின் பி 12 குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள்:
உதடு அல்லது நாக்கில் புண் அடிக்கடி வந்தால் வைட்டமின் பி 12 குறைவாக உள்ளது.
அயர்ன் மற்றும் ஹீமோகுபுளோபின் குறைபாடு:
நகத்தில் கோடு கோடாகவும், முகம் நிறம் இயல்பாக இருப்பதாய் விட வெளுப்பதாக உணர்ந்தால் அயர்ன் மற்றும் ஹீமோகுபுளோபின் குறைவாக இருப்பதற்கான அறிகுறிகளாகும்.
வைட்டமின் சி குறைபாடு அறிகுறிகள்
வைட்டமின் E குறைபாடு:
வைட்டமின் E குறைவாக இருந்தால் காலில் தசை பிடிப்பு ஏற்படும்.
Yeast Overgrowth Symptoms:
நாக்கில் வெள்ளை வெள்ளையாக இருந்தால் yeast overgrowth என்று அழைக்கிறோம். இப்படி இருந்தால் குடலில் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். எப்படி என்று நினைக்கிறீர்களா நமது நாக்கில் சிறிய சிறிய புள்ளிகளாக இருக்கும். இதை டேஸ்ட் பட்ஸ் என்று கூறுகிறார்கள். இந்த சிறிய புள்ளிகளால் தான் எச்சில் சுரந்து சுவையை உணர முடிகிறது. உணவு மற்றும் எச்சில் இரண்டும் சேர்ந்தால் தான் செரிமானம் அடைவதற்கு வழி செய்கிறது.உடலில் நீர்சத்து குறைவாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன..?
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |