Vitamin B12 Deficiency Symptoms
நாம் தினமும் சாப்பிடும் காய்கறிகள் முதல் பழங்கள் வரை என அனைத்திலும் வைட்டமின் நிறைந்து இருக்கிறதா என்று பார்த்து பார்த்து தான் சாப்பிடுவோம். அதுமட்டும் இல்லாமல் நம்முடைய உடலில் வைட்டமின் சத்து என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அன்றாடம் என்ன தான் நாம் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொண்டாலும் கூட வைட்டமின்கள் குறைபாடு என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. அத்தகைய குறைபாடுகள் அனைத்தும் நம்முடைய உடலில் அறிகுறிகள் மூலம் தெரியவருகிறது. அந்த வகையில் இன்று வைட்டமின் B12 குறைபாட்டினால் ஏற்படக்கூடிய அறிகுறிகள் என்ன என்பதை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
ஃபைப்ராய்டு கருப்பை கட்டி அறிகுறிகள் என்ன தெரியுமா |
வைட்டமின் பி 12 என்றால் என்ன..?
நம்முடைய உடலில் இரத்த அணுக்களை உற்பத்தி செய்யவும் மற்றும் உடலில் காணப்படும் நரம்பு செல்களை பாதுகாப்பாக வைக்கவும் செய்யும் ஊட்டச்சத்து வைட்டமின் B12 ஆகும்.
மேலும் இது நம்முடைய உடலில் DNA-ஐ உருவாக்குவதற்கு முக்கியமான ஒன்றாக உள்ளது. அதேபோல் சாராரியாக ஒரு நாளைக்கு பெரிய மனிதர்களுக்கு 2.4 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 தோராயமாக தேவைப்படுகிறது.
வைட்டமின் பி 12 குறைபாடு வரக் காரணம்:
அன்றாடம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் சரியான அளவில் வைட்டமின் பி12 நிறைந்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதே வைட்டமின் பி12 குறைபாட்டிற்கு முக்கிய காரணம் ஆகும்.
வைட்டமின் பி12 அறிகுறிகள்:
- குமட்டல்
- நரம்பு தொடர்பான பிரச்சனை
- பசியிழப்பு
- உடல் சோர்வு
- தோலில் நிற மாற்றம்
- மலச்சிக்கல்
- ஒழுங்கற்ற இதயத்துடிப்பு
- மன அழுத்தம்
- இரத்த சோகை
- பார்வை பிரச்சனை
மேலே சொல்லப்பட்டுள்ள பிரச்சனைகள் அனைத்தும் வைட்டமின் பி12 குறைபாட்டிற்கான அறிகுறியாக கருதப்படுகிறது. ஒருவேளை இத்தகைய அறிகுறிகள் இல்லாமல் வேறு ஏதேனும் அறிகுறிகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் கூற வேண்டும்.
வைட்டமின் பி 12 உணவுகள்:
- மீன்
- முட்டை
- இறைச்சி
- தயிர்
- கோழி
- ஷிடேக் காளான்கள்
இந்தெந்த அறிகுறிகள் இருந்தா அது தொழுநோயாம் அது என்னென்ன அறிகுறிகள் என்று தெரிந்து கொள்ளுங்க
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |