வைட்டமின் சி குறைபாடு அறிகுறிகள் | Vitamin C Deficiency Symptoms in Tamil
பொதுவாக நமது உடலில் ஏதாவது ஒரு சின்ன பிரச்சனையாக இருந்தாலும் கூட அதனை ஏதோ ஒரு வகையான அறிகுறி மூலம் நமது உடல் வெளிப்படுத்துகிறது. ஆனால் இந்த அறிகுறியினை நாம் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. சின்ன பிரச்சனை பெரிதாக மாறியவுடன் தான் அதனை கவனிக்கவே செய்கிறோம். அதுமட்டும் இல்லாமல் நாம் மருத்துவரை பார்க்க செல்லும்போது எல்லாம் வைட்டமின் அதிக உள்ள உணவு மற்றும் பழங்களை சாப்பிடுங்கள் என்பது தான் மருத்துவரின் அறிவுரையாக இருக்கிறது. இத்தகைய நிலையில் ஒரு சிலர்க்கு உடலில் வைட்டமின் சத்துக்கள் குறைவாக இருப்பதும் அதனால் ஏற்படும் அறிகுறிகளும் தெரியவில்லை. ஆகவே இன்று வைட்டமின் C குறைபாட்டினால் வரும் அறிகுறிகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
வைட்டமின் சி என்றால் என்ன..?
வைட்டமின் C என்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்யும் ஆன்டி ஆக்ஸிடண்ட்களாக செயல் படுகிறது. இது உடலிற்கு தேவைப்படும் முக்கியமான சத்துக்களின் ஒன்றாகும்.
அதுமட்டும் இல்லாமல் வைட்டமின் C சத்தானது உடலில் மிகவும் வேகமாக கரையும் தன்மை கொண்டதாக இருக்கிறது.
உடலில் நீர்சத்து குறைவாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன..? |
வைட்டமின் சி குறைபாடு அறிகுறிகள்:
நமது உடலில் வைட்டமின் C சத்து குறைவாக இருக்கும் போது கேரடோசிஸ் பிலாரிஸ் என்ற ஒரு வகையான தோல் பிரச்சனை வருகிறது. இதனை விளைவாக சருமத்தில் தோல் உரிதல் மற்றும் தலையில் அதிகமாக முடி கொட்டுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
உடலில் மேல்பகுதியில் காணப்படும் முடிகளில் உள்ள இரத்த நாளங்கள் வழியாக நமது உடலுக்கு தேவையான இரத்தம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் செல்கிறது. இப்படி இருக்கும் போது நமது உடலில் வைட்டமின் C சத்து குறைபாடு ஏற்படும் போதும் முடிகளை சுற்றி சிவப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றும் இதுவும் ஒரு விதமான வைட்டமின் C குறைபாடு ஆகும்.உங்களுடைய கை மற்றும் கால்களில் உள்ள நகங்களுக்கு இடையே இரத்தம் கசிதல் மற்றும் சிவந்து காணப்படுதல் இது போன்ற அறிகுறிகளும் வைட்டமின் சி குறைபாட்டில் அடங்கும்.
வைட்டமின் சி அதிக உள்ள உணவுகளை நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி சரியாக எடுத்துக்கொள்ளாத போது வைட்டமின் சி சத்து குறைய தொடங்கும் போது வறட்சியான சருமம் அல்லது தோல் சுருங்குதல் போன்ற அறிகுறிகள் வரும்.
இத்தகைய குறைபாடு நமது உடலில் வரும் போது சிறிய அளவிலான காயம் கூட குணம் அடைவதற்கு அதிக நாட்கள் ஆகும். இதனை நாம் சாதாரணமாக நினைக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். ஏனென்றால் இதுவும் வைட்டமின் C குறைபாட்டின் அறிகுறியாகும்.
எலும்புகளில் இரத்த கசிவு, எலும்புகள் வளர்வதில் தாமதம், மூட்டு வலி, மூட்டுகளில் இரத்தக்கசிவு மற்றும் பல்லில் உள்ள ஈரலில் இரத்த கசிவு இதுபோன்ற அறிகுறிகள் காணப்பட்டாலும் அது வைட்டமின் C குறைபாட்டின் அறிகுறியாகும்.
நீங்கள் உடல் அதிக வேண்டி எந்த விதமான முயற்சியும் செய்யாதபோது திடீரென உடல் எடை அதிகரித்து கொண்டே போகுதல் மற்றும் உடல் சோர்வு இந்த இரண்டும் காணப்படும்.
வாய் புண் மற்றும் வயிற்றில் புண் வருவதும் இதன் அறிகுறிகளில் அடங்கும்.
வைட்டமின் குறைபாடு அறிகுறிகள் & அதற்கான உணவுகள்..! |
வைட்டமின் C குறைபாடு வருவதற்கான காரணம்:
வைட்டமின் C சத்தானது நமது உடலுக்கு ஊட்டச்சத்தினை அளிக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு சத்தாகும். இந்த சத்தினை நமது உடலுக்கு அளிப்பதற்கு தினமும் நாம் வைட்டமின் C அதிக உள்ள காய்கறி மற்றும் பழங்கள்எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதுமாதிரி உணவுகளை நாம் சாப்பிடாதபோது ஆரம்பத்தில் வைட்டமின் சி ஒட்டு இரத்த சோகையாக வருகிறது.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |