வைட்டமின் கே குறைபாடு அறிகுறிகள் | Vitamin k Deficiency Symptoms in Tamil

Advertisement

வைட்டமின் கே குறைபாடு அறிகுறிகள் | Vitamin k Deficiency Symptoms

நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் ரொம்ப முக்கியமானது. அந்த வகையில் வைட்டமின் கே முக்கியமானது, ஏனெனில் இது கல்லீரல் புரதங்களை உருவாக்க உதவுகிறது, இரத்தத்தை சாதாரணமாக உறைவதற்கு அனுமதிக்கிறது, அதிக இரத்தப்போக்கு தடுக்கிறது. ஆரோக்கியமான எலும்புகளுக்கும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதனால் இந்த பதிவில் வைட்டமின் கே குறைந்தால் உடலில் என்ன அறிகுறிகள் தோன்றும் என்று படித்து தெரிந்து கொள்வோம்.

வைட்டமின் கே குறைபாடு இருந்தால் ஏற்படும் அறிகுறிகள்:

Vitamin k Deficiency Symptoms in tamil

  1. ஏதவாது அடிபட்டால் காயம் ஏற்படுதல்
  2. அதிக இரத்தப்போக்கு
  3. ஈறு மற்றும் பற்களில் இரத்தப்போக்கு
  4. நகங்களில் இரத்தப்போக்கு அல்லது இரத்தக்கட்டிகள்
  5. உணவுப்பாதையில் ஏதாவது ஒரு இடத்தில் இரத்தப்போக்கு வருவது
  6. சருமம் வெளுத்துப்போவது, மற்றும் பலவீனம்
  7. மலம் கழிக்கும் போது இருண்ட நிறத்தில் அல்லது இரத்தம் கலந்து வருவது

வைட்டமின் சி குறைபாடு அறிகுறிகள்

குழந்தைகளில் வைட்டமின் கே குறைபாடு அறிகுறிகள்:

  1. பிறந்த குழந்தைக்கு தொப்புள் கொடியை அகற்றும் போது இரத்தம் வருதல்
  2. வாந்தி
  3. சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் இரத்தப்போக்கு
  4. ஆண்குறியில் இரத்தப்போக்கு

வைட்டமின் கே குறைபாடு ஏற்படுவதற்கான காரணம்:

பிறந்த குழந்தைக்கு வைட்டமின் கே குறைபாடு ஏற்படுவதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.

தாயின் தாய்ப்பாலில் வைட்டமின் கே குறைபாடு இருப்பதால் குழந்தைக்கும் பற்றாக்குறை ஏற்படுகிறது. பிறந்த குழந்தைக்கு வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் கல்லீரல் பிரச்சனை ஏற்படும்.

பெரியவர்கள் வைட்டமின் கே நிறைந்த உணவுகளை சாப்பிடாமலே இருப்பதால் ஏற்படுகிறது.

வைட்டமின் கே உணவு வகைகள் பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil

 

Advertisement