Symptoms of Eye Flu in Tamil
இக்காலத்தில் யாருக்கு என்ன வியாதி வரும் என்று சொல்லமுடியாத அளவிற்கு தீங்குவிளைவிக்கும் புது புது வைரஸ்கள் உருவான வன்னம் உள்ளன. சமீபத்தில் கூட கண் காய்ச்சல் நோயால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். இது ஒரு தொற்று நோய் என்பதால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவக்கூடியது ஆகும். எனவே இந்த நோய் வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் உள்ளிட்ட பல விவரங்களை பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம் வாங்க.
What areThe Symptoms of Eye flu Virus in Tamil:
கண் காய்ச்சல் என்றால் என்ன.?
கான்ஜுன்க்டிவிடிஸ் பொதுவாக வைரஸ் மற்றும் அதிகப்படியான பாக்டீரியா அல்லது ஒவ்வாமை போன்ற காரணங்களால் ஏற்படும் கண் நோய் ஆகும். இது பலரையும் பாதிக்கும் தொற்று நோய் ஆகும்.
ஹை சுகர் இருப்பதற்கான அறிகுறிகள்
கண் காய்ச்சலின் அறிகுறிகள்:
- கண்களில் வீக்கம்
- கண் சிவந்து போதல்
- கண்ணிலிருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றம்
- கண்களில் வலி
- கண் இமை வீக்கம்
- சிலருக்கு மங்கலான பார்வை
- இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து கொள்வது நல்லது.
கண் காய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.?
- கண்ணை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
- கண்களை தொடுவதையோ அல்லது தேய்ப்பதையோ தவிர்க்க வேண்டும்.
- கண்ணில் வீக்கம் இருந்தால் சூடான தண்ணீரில் துணியை நனைத்து துடைக்கவும்.
- சுத்தமில்லாத கண் கண்ணாடிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- கண்ணிற்கு ஒப்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.
- கண் நோய் தொற்று இருப்பவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.
கண் நோய்க்கான சிகிச்சை:
கண் நோய்க்கு நீங்களாகவே சுயமருந்து எடுத்து கொள்ளுதல் கூடாது. கண் நோய்க்கான அறிகுறிகள் உங்களிடம் தென்பட்டால் உடனே கண் மருத்துவரிடம் சென்று உங்கள் கண்களை பரிசோதித்து கொள்ளுங்கள்.
கருப்பை இறக்கம் இருப்பதை காட்டும் அறிகுறிகள் என்ன
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |