அன்னையர் தினம் கட்டுரை | Mother’s Day Essay in tamil

Advertisement

Mother’s Day Katturai in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அன்னையர் தினம் கட்டுரை பற்றி விவரித்துள்ளோம். அன்னையர் தினம் மற்ற சர்வதேச தினங்களை போல் குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்படுவதில்லை. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் நமக்கு முதல் கடவுளாகிய அன்னையை போற்றி வணங்குதல் வேண்டும். மேலும்,  அன்னையர் தினம் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில், அன்னையர் தினம் பற்றிய கட்டுரை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

அன்னையர் தினம் கட்டுரை:

குறிப்பு சட்டகம்:

  • முன்னுரை
  • அன்னையர் பெருமை
  • அன்னையர் தினம் சிறப்பு
  • அன்னையர் சிறப்பு
  • குழந்தைகளின் கடமை
  • முடிவுரை

முன்னுரை:

அன்னை தான் இவ்வுலகில் நமக்கு கிடைத்த பொக்கிஷம். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்ˮ ஒளவைப் பாட்டியார் தனது நீதி நூல்களில் ஒன்றான கொன்றை வேந்தனில் கூறியுள்ளார். இதன் பொருள் அன்னை தான் நம் முதல் கடவுள். அன்னையர்கள் பல விதமான கஷ்டங்களுக்கு இடையில் தம்மை வளர்த்து வருகிறார்கள். மேலும், பல விதமான சாதனைகளையும் படைத்து வருகிறார்கள்.

இத்தகைய போற்றதற்குரிய அன்னையர்களை போற்றும் வகையில் கொண்டாடப்படும் தினமே அன்னையர் தினமாகும். அன்னையர் தினம் உலகின் பல பகுதிகளில் வெவேறு தினத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்தியா உட்பட பல நாடுகளில் மே மாதம் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்னையர் தினம் தோன்றிய வரலாறு

அன்னையரின் பெருமை:

பெண்கள், வீட்டில் சகோதரியாக⸴ தாரமாக⸴ தோழியாக⸴ பாட்டியாக இப்படி பல பாத்திரங்களில் நம்மை வழிநடத்தி சென்றாலும், அன்னை என்ற பாத்திரமே மிக உன்னதமான பாத்திரமாகும். அண்ணையினால் மட்டுமே ஒரு பிள்ளையின் அனைத்து  உணர்வுகளையும், கஷ்டங்களையும் உணர முடியும்.

நாம் கருவில் இருக்கும்போதே கருவிலேயே பல சவால்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி இந்த சமூகத்திற்கு பெறுமதி மிக்கவர்களாக நம்மை தருபவர்கள் அன்னையர்களே. எல்லா உறவுகளையும் ஒன்றிணைத்து தன்நலம் கருதாது எல்லா உறவுகளும் முக்கியம் என வாழும் பெண் தெய்வங்களே அன்னையர்கள் ஆவர்.

அன்னையர் தினம் சிறப்பு:

அமெரிக்காவில் வாழ்ந்த மரியா ஜார்விஸ் என்ற பெண்மணியின் தாயன்பின் காரணமாக அன்னையர் தினம் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகின்றது.

அன்னையர் சிறப்பு: 

இந்த உலகில் அன்னையின் அன்பிற்கும் பண்பிற்கும் வேறெதுவும் இல்லை என்றால் அது மிகையாகாது. கருவில் இருக்கும் குழந்தை ஆணோ பெண்ணோ என அறியாத போதிலும் தன் குழந்தையைப் பத்திரமாய் சுமந்து உலகின் அழகை பார்க்க வைக்கும் உன்னத உறவு தான் அன்னை தான். இவ்வுலகில் அன்னையை தவிர வேறு யாராலும் அதீத அன்பை கொடுத்து விட முடியாது. அன்பின் அடையாளமாய் திகள்பவளே அன்னை.

குழந்தைகளின் கடமை:

இந்த சமூகத்தில் தான் பெற்ற பிள்ளைகள் பண்புடனும்⸴ பணிவுடனும்⸴ நற்பழக்கவழக்கங்களுடனும் வளர்ந்து வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்பதே ஒவ்வொரு அன்னையரின் மிகப்பெரிய ஆசை ஆகும். அதனை நிறைவேற்றி அன்னையரை மகிழ்விப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை ஆகும். முக்கியமாக. எம்மைப் பாராட்டி⸴ சீராட்டி வளர்த்த அன்னைக்கு நாம் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

அன்னையர் தினம் எப்போது 2024

முடிவுரை:

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள். இத்திருக்குறளிற்கு ஏற்ப  நாம் கல்வி கற்று வாழ்வில் முன்னேறி அன்னைக்குப் பெருமை சேர்க்க வேண்டும். மேலும், நம்மைப் பெற்றெடுத்த தாயை அன்னையர் தினத்தில் மட்டுமல்லாது என்றென்றும் போற்றி வணங்க வேண்டும்.

அன்னையர்கள் அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..!

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement