தாய் பற்றிய கட்டுரை | Amma Patriya Katturaigal in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் தாய்மை பற்றிய கட்டுரையை பார்க்கலாம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் முதல் கடவுள் அவரது தாய் தான். நமக்கு நன்மையை மட்டுமே நினைக்கும் உறவு தாய் மட்டுமே. ஆகையால், தாயின் பெருமையை இப்பதிவில் கட்டுரை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
உலகத்தை இயற்கையோ இறைவனோ படைத்திருந்தாலும் ஒரு உயிர்களை பிரசவிக்கும் சக்தி தாய்மைக்கு தான் இருக்கிறது. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தன் குழந்தைக்காக வாழ்வினை அர்ப்பணிக்கும் ஒரு உன்னதமான உறவு எது என்றால் அது தாய்மை உறவுதான். வாங்க இந்த பதிவில் தாய்மையின் சிறப்பினை ஒரு கட்டுரையாக பார்க்கலாம்..
என் குடும்பத்தை மேம்படுத்த கட்டுரை |
பொருளடக்கம்:
முன்னுரை |
அம்மா என்ற தெய்வம் |
தாய்ப்பாசம் |
தாய்மையின் பெருமைகள் |
குழந்தைகளின் வளர்ச்சியில் தாயின் பங்கு |
முடிவுரை |
முன்னுரை:
“தாயிற் சிறந்த கோயில் இல்லை” என்று ஒளவையார் அப்போதே தாய்மையின் சிறப்பினை போற்றி பாடியவர். தாய் என்பவள் இல்லை என்றால் இந்த உலகத்தில் மனிதன் என்ற பிறப்பே இருந்திருக்காது. அன்பினுடைய முழு வடிவமே தாய்மையை தான் குறிக்கும். சுயநலம் இல்லாத ஒரு உறவு என்றால் இந்த உலகில் தாய் மட்டும்தான். அம்மா என்ற ஒரு வார்த்தையில் முழு உலகமே அடங்கிவிடும்.
அம்மா என்ற தெய்வம்:
இந்த உலகத்தில் அம்மாவைவிட வேறு எந்த சிறப்பும் இல்லை. நம்மை காப்பதற்கு பல கடவுள்கள் இருந்தாலும் தன் அன்னையை போல் காப்பதற்கு இந்த உலகத்தில் ஈடு இணை எதுவும் இல்லை. தான் அறிவில் குறைவாய் இருந்தாலும் தன்னுடைய குழந்தை அறிவிலும், படிப்பிலும் மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று தன்னலம் பார்க்காமல் நினைப்பவள் அம்மா மட்டுமே.
தாய்ப்பாசம்:
தாய் என்பவள் மனிதருக்கு மட்டுமல்லாமல் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தக்கூடியவள். யாராலும் தாய்மையின் பாசத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. ஐந்து அறிவு படைத்த விலங்கினம் கூட தன்னுடைய குட்டிகளை பாதுகாத்து அதற்கு உணவளித்து தாய்ப்பாசத்தை வெளிப்படுத்துகிறது. தாய்ப்பாசம் ஒன்று இல்லையென்றால் இந்த உலகமே ஏதோ நிறைவு பெறாதது போன்று இருக்கும்.
மனித நேயம் கட்டுரை |
தாய்மையின் பெருமைகள்:
ஒரு தாய் தன்னுடைய உதிரத்தையே பாலாக தந்து குழந்தைகளை பாதுகாத்து வளர்த்து வருகிறாள். தனக்குள் எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் அதனை தன் குழந்தைகளிடம் வெளிப்படுத்தாமல் மகிழ்ச்சிப்படுத்த கூடிய ஒரு ஆற்றல் தாய்மையிடம் மட்டுமே இருக்கிறது. வணக்கத்திற்கும், மரியாதைக்குரிய உயர்நத ஸ்தானத்தை நமது அன்னையர்களுக்கு வணங்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அவர்களுடைய தாய்மையின் பாசத்தை கூறிக்கொண்டே போனால் அது எண்ணில் அடங்காதது.
குழந்தைகளின் வளர்ச்சியில் தாயின் பங்கு:
ஒரு தாய் இல்லாமல் அந்த குழந்தை அறிவுடனும், ஆரோக்கியத்துடனும் வளர்வது அவ்ளோ சுலபமல்ல. தன் குழந்தையை அன்போடு அரவணைத்து அவர்களுக்கு என்னென்ன தேவைகள் என்று அறிந்து உரிய நேரத்தில் அவர்களுக்கு பணிவிடை செய்துவிட்டு பாதுகாப்பதில் இந்த உலகத்தில் தாயை தவிர வேறு யாரும் இருக்க முடியாது. ஒரு மனிதன் சமூகத்தில் நல்ல வளர்ச்சி நிலையில் இருக்கிறான் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவனுடைய தாய்மையின் வளர்ப்பினையே தான் சொல்ல வேண்டும். உலகத்தில் எத்தனையோ உறவுகள் தன் மீது பாசத்தை காட்டுவதற்கு இருந்தாலும் தாய் பாசம் எப்போதும் நமக்கு தனித்துவமானது தான்.
முடிவுரை:
நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் வேலை பார்த்துக்கொண்டே குடும்பத்திற்காக உழைக்கும் பெண்மையை எப்போதும் நாம் போற்ற வேண்டும். ஒரு தாயினுடைய முழுமையான அன்பு கிடைக்கப்பெற்ற குழந்தைகள் அனைவருமே வரம் பெற்ற குழந்தைகள் என்றே சொல்லலாம். தாயிடம் நாம் எந்த ஒரு கடமைகளையும் எப்போதும் எதிர்பார்த்து செய்யக்கூடாது. நம்முடைய பிறப்பிற்காக இறப்பின் வாசல் வரை சென்று வரும் அன்பின் சிகரம்தான் தாய். இளமை காலத்திலிருந்து நம்மை பாதுகாத்து வளர்த்து வந்த அன்னைக்கு நன்றி கடனாக அவர்களை இறுதி காலம் வரை வைத்து பாதுகாப்பது ஒவ்வொரு குழந்தையின் கடமையாகும்.
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |