ஆசிரியர் பற்றிய கட்டுரை | Aasiriyar Katturai in Tamil
வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் அன்பான நேயர்களே… இன்று நம் பதிவில் ஆசிரியர் பற்றிய கட்டுரைகளை படித்து தெரிந்து கொள்வோம். எல்லா மனிதனின் வாழ்விலும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளவர்கள் தான் ஆசிரியர்கள். “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்று பெற்றோர்க்கு அடுத்து உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் தான் ஆசிரியர்கள். வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர் பணிக்கு உண்டு. அந்த வகையில் ஆசிரியர் பற்றிய கட்டுரைகளை இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ ஆசிரியர் தினம் பேச்சு போட்டி கட்டுரை
ஆசிரியர் என்பவர் யார்:
ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குபவர். ஒன்றுமே தெரியாமல் பள்ளியில் சேரும் குழந்தைகளை ஒரு பொக்கிஷ புத்தகமாக மாற்றுவதே ஆசிரியர்கள் தான். ஆசிரியர் என்பவர் ஒட்டுமொத்த உலக அறிவையும் ஒரே இடத்தில் இருந்து மாணவர்களுக்கு சொல்லி தருபவர்கள். நாம் படிக்கும் பள்ளியில் நமக்கு கிடைத்த ஒரு அறிய புதையல் தான் ஆசிரியர்கள்.
ஏன் இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிர்களும் ஆசிரியர் தான். சிறிய மண்புழு கூட மண்ணை எப்படி உரமாக்குவது என்பதை கற்று தருகிறது. “சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்” என்னும் பழமொழியை வைத்து, மனிதன் ஆறு அறிவுடன் பிறந்திருந்தாலும் அவனுடைய அறிவை பயன்படுத்துவதற்கு ஒரு வழிகாட்டி தேவை. அந்த வழிகாட்டி தான் ஆசிரியர்கள். ஒரு குழந்தையை வருங்காலத்தில் சிறந்த மனிதனாக உருவாக்குவது ஆசிரியர்கள் தான்.
ஆசிரியரின் சிறப்பு:
ஒரு மனிதனுக்கு கல்வி அறிவை கற்று தரும் இடத்தில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அப்படி நம்மை உருவாக்கும் ஆசிரியர்களை நாம் போற்றி வணங்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தையும், நல்ல பண்புகளையும், சமூகத்தை எதிர்கொள்வதற்கான தைரியத்தையும் கற்று தருகின்றனர். ஒரு தவறான மாணவனை கூட நல்ல மாணவனாக வழிநடத்தும் சக்தி ஆசிரியர்களுக்கு உண்டு.
“எழுத்தறிவித்தவன் இறைவனாவான்” என்ற பழமொழிக்கேற்ப ஒரு மனிதனுக்கு யாரெல்லாம் கல்வியறிவை கற்றுத் தருகிறார்களோ அவர்களெல்லாம் இறைவனுக்கு நிகரானவர்கள் என்று கூறப்படுகிறது. அதுபோல, ஆசிரியர்கள் இறைவனுக்கு நிகரானவர்கள். ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவனுக்கும் கிடைத்த நல்ல நண்பன்.
நாம் கற்கும் கல்வியை தவிர இந்த உலகிலுள்ள அனைத்தும் அழியக்கூடியவை. அழிவில்லா கல்வியை கற்று தரும் ஆசிரியர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். மற்ற செல்வங்கள் எல்லாம் அழிந்து விடும். ஆனால் கல்வி செல்வமானது அழிவில்லா செல்வமாகும். அந்த கல்வி செல்வத்தை அள்ளித் தரும் ஆசிரியர்கள் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.
ஆசிரியர் பணியின் முக்கியத்துவம்:
தாயின் கருவறையை போன்றே வகுப்பறையும் புனிதமானது. பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சாதி, மொழி, இன வேறுபாடுகள் கிடையாது. அந்த இன வேறுபாடுகள் இல்லாமல் மாணவர்களை உருவாக்குபவர்கள் தான் ஆசிரியர்கள். களி மண்ணாய் இருக்கும் மாணவர்களை ஒரு சிலையாக வடிவமைப்பவர்கள் தான் ஆசிரியர்கள்.
ஒரு குழந்தையை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துபவர்கள் பெற்றோர்கள் என்றால், அந்த குழந்தைக்கு இந்த உலகத்தையே அறிமுகப்படுத்துபவர்கள் தான் ஆசிரியர்கள். ஒரு குழந்தையை சிறந்த மனிதனாக உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது.
ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்:
- ஆசிரியர்கள் மாணவர்களிடம் ஒரு தாய், தந்தையை போல, ஒரு சிறந்த நண்பனை போல இருக்க வேண்டும்.
- ஆசிரியர்கள் மாணவர்களின் நலனில் அக்கறை காட்டவேண்டும்.
- ஒரு சாதாரண மாணவனை நீங்கள் கொடுக்கும் நம்பிக்கை வார்த்தைகளால் சாதனையாளனாக மாற்ற வேண்டும்.
- நேர்மையான எண்ணங்களை மாணவர்களின் மனதில் பதியவைக்க வேண்டும்.
- மாணவர்களுடன் ஆசிரியர்கள் புன்னகை தவழும் முகத்துடன் பேசி பழகவேண்டும்.
இதுபோன்ற கட்டுரைகளை பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் ⇒ | தமிழ் கட்டுரை |