உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை | Ulaga Sutru Sulal Katturai in Tamil

Ulaga Sutru Sulal Katturai in Tamil

Ulaga Sutru Sulal Katturai in Tamil

இந்த உலகமே இணைத்து இயற்கைக்காக பல தினங்களை கொண்டாடி வருகின்றன. அந்த வகையில் உலக மக்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு தினம் தான் உலக சுற்றுசூழல் தினம். இந்த தினம் ஆண்டு தோறும் ஜூன் 5 தேதி கொண்டாடப்படுகிறது. இந்த உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நாங்கள் இங்கு ஒரு சிறிய கட்டுரையை பதிவு செய்துலோம் அவற்றை படித்து பயன் பெறுங்கள் நன்றி.

உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை

முன்னுரை:

மனிதனுடைய அசுரர் ஆதிக்க போக்கினால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியின் விலை மதிக்க முடியாத சொத்துக்களான இயற்கை வளங்களை அழித்து கொண்டிருக்கின்றோம்.

இது நமது வருங்கால சந்ததியினரை வெகுவாக பாதிக்கும் என்பதில் எந்த ஒரு அச்சமும் இல்லை. இவற்றை தடுத்து விழிப்புணர்வூட்டும் வகையில் தான் உலக சுற்று சூழல் தினமானது கொண்டாடப்படுகிறது. இது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சூழல்

நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த சுற்று சூழல் எத்தனை அபூர்வங்கள் நிறைந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அழகிய நதிகள், பச்சைபசேல் என்ற காடுகள், நீண்டு விரிந்த சமுத்திரங்கள், நீலவண்ண ஆகாயம் என அழகும் ஆச்சரியங்களும் நிறைந்தது.

இத்தகைய சூழலில் மனிதர்களை போலவே பிற விலங்குகள், பறவைகள், மீன்கள், பூச்சிகள் என பல்லாயிர கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவை ஒவ்வொன்றும் இந்த சுற்று சூழலின் நிலைத்திருப்பை உறுதிப்படுத்துகின்றன. இந்த சூழல் தான் நமது வாழ்விற்கு தேவையான அனைத்தையும் நமக்கு வழங்கி பாதுகாக்கின்றது.

சுற்றுசூழல் பாதிக்கப்பின் அவசியம்:

இந்த சுற்று சூழல் நமக்கு எத்தனை நன்மைகளை கொடுத்திருக்கின்றது. உண்ண உணவுகள் மண்னில் விளைகின்றன, குடிக்க தண்ணீர் மழையாக கிடைக்கிறது, சுவாசிக்க ஆக்சிஜன் வளிமண்டலத்தில் இருந்து கிடைக்கின்றது, தங்குமிடங்களை அமைக்க காடுகள் வளம் தருகின்றன. இவ்வாறு இயற்கை நமக்கு நிறைய விஷயங்களி வழங்குகிறது. ஆகவே இயற்கை சூழலின் துணையின்றி மனிதனால் இங்கு வாழவே முடியாத நிலை காணப்படுகின்றது.

இயற்கை தன்னை தகவமைத்து கொள்வதனால் தான் காலநிலைகள் சரியாக மாறி கொண்டிருக்கின்றன. பூமியின் அற்புத சமநிலை தொடர்ந்து பேணி காத்து வருவதனால் தான் இங்கே நம்மால் வாழ முடிகிறது.

சூழல் மாசடைவு:

உலமெங்கும் தற்பொழுது சுற்றுசூழல் வேகமாக பாதிக்கப்பட்டு வருவதனை அறிந்துகொள்ள முடிகின்றது.

மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் உலகநாடுகளின் அவிருத்தி கொள்கைகள் இயற்கை வளங்களை வெகுவாக சுரண்டிவருகின்றது. காடுகள் வெகுவாக அழிக்கப்பட்டு விட்டன.

இதன் விளைவால் காலநிலை மாற்றம் பெரிய பிரச்சனையாக உருவாக்கி விர்ரற்றது. இதனால் பூகோள வெப்பநிலையும் உயர்வடைந்து விட்டது. இவை அனைத்தும் சுற்றுசூழல் மாசடைவின் விளைவாகவே காணப்படுகின்றது.

முடிவுரை:

இந்த அசாதரண நிலை தொடர்பாக உலக நாடுகள் அண்மை காலமாக சற்று விழிப்படைய துவங்கியுள்ளன. சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளன.

இதனால் தான் ஐக்கிய நாடுகள் சபை சுற்றுசூழல் தினத்தை ஜீன் 5ம் தேதி உலகளாவிய ரீதியில் கொண்டாடி வருவதுடன் உலக மக்களுக்கு சுற்று சூழல் பாதுகாக்க பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்து சூழலை பாதுகாக்க வேண்டியது காலத்தின் அவசியமாகும்.

இயற்கை நம் முன்னோர்கள்
நமக்கு விட்டு சென்ற பரிசு
இயற்கையை காப்போம்
நல்ல இயற்கையை விட்டு செல்வோம்
அடுத்த தலைமுறைக்கு பரிசாக
நன்றி வணக்கம்..!

இதையும் படியுங்கள் 👉👉👉 சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை

மேலும் இது போன்று கட்டுரை பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Katturai in Tamil