இன்று உலக பாரம்பரிய தினம் தெரியுமா?

Advertisement

இன்று உலக பாரம்பரிய தினம் தெரியுமா? – Ulaga Parambariya Dhinam 

World Heritage Day Speech 2022 in Tamil:- சர்வதேச நினைவுச் சின்னம் பாதுகாப்பு ஆலோசனை சபை சார்பாக 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று ஒரு கருத்தரங்கம் டுனிசியாவில் நடைபெற்றது. உலகளவில் நினைவுச் சின்னங்களைக் கொண்டாட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதனை யுனெஸ்கோ ஏற்றுக்கொண்டது. முதன் முதலாக 1983ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது ஒவ்வொரு ஆண்டும் “ஏப்ரல்-18” ஆம் தேதி உலகப் பாரம்பரிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று ஏப்ரல் 18 ஆம் தேதி.

உலக பாரம்பரியம் என்றால் என்ன? ஒவ்வொரு நாட்டிற்கும் பெருமையும் புகழும் சேர்ப்பது அந்த நாட்டின் பண்டைய வரலாற்று நினைவுச் சின்னங்கள் (Historical Monuments), கல்வெட்டுகள் (Inscriptions), ஓவியங்கள் (Paintings) மற்றும் சிற்பங்களே (Sculptures) ஆகும். சரி இந்த பதிவில் உலக பாரம்பரிய தினம் பற்றி சில தகவல்களை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

உலக பாரம்பரிய தினம் ஏப்ரல் 18 – International Day For Monuments and Sites 2022:

ஒரு நாட்டுக்கு அழகும், பெருமையும் சேர்ப்பது அதன் பழங்கால நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களே. இந்த நாளில் என்ன செய்யலாம் என்று அந்த மாநாடு சிலவற்றை பரிந்துரைத்துள்ளது.

பழங்கால கட்டட பெருமைகளை கண்காட்சிகளாக அமைத்து விவரிப்பது

கட்டணம் ஏதுமில்லாமல் இந்தத் தினத்தில் நினைவிடம், மற்றும் அருங்காட்சியங்களில் பொது மக்களை அனுமதிப்பது

இந்தத் தினத்தின் தேவை பற்றி பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிப்பது

பொது இடங்களில் விவாதங்கள் நடத்துவது

பாரம்பரிய பெருமைகளை பறைசாற்ற்றும் புத்தகங்கள், தபால் தலை முத்திரைகள் போன்றவற்றை அச்சிடுவது

பாரம்பரியத்தை பேணி பராமரித்து வருபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்குவது

பள்ளிக்கூட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் பாரம்பரியத்தின் பெருமைகளை எடுத்துச் செல்வது..! நிகழ்ச்சிகள் நடத்துவது

உலக பாரம்பரிய தினம் கடைபிடிக்க மிக முக்கிய காரணம் என்ன தெரியுமா?

மனித இனத்துக்கே பொதுவானவை இயற்கை வளங்கள். ஆனால் கவனிப்பாரற்று இந்த பழங்கால நினைவுச் சின்னங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன. உலகின் மிக முக்கிய நினைவுச் சின்னங்களை பாதுகாக்க யுனெஸ்கோ உள்ளிட்ட அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் உலக பராம்பரிய தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement