ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கட்டுரை

Advertisement

ஊழல் ஒழிப்பு கட்டுரை

எப்பொழுது ஒரு நாடு ஊழலற்ற நாடாகமாறுகின்றதோ அப்பொழுதான் அந்த நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கை தரமும் வளர்ச்சி அடையும். நாட்டில் நடக்கும் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்க வேண்டியது ஒவ்வொருவருடைய அத்தியாய கடமைகளில் ஒன்றாகும். ஊழலை தடுக்கும் வகையில் இந்த பதிவில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கட்டுரை பற்றி பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்து பயன்பெறுங்கள்.. சரி வாங்க ஊழல் ஒழிப்பு கட்டுரை பற்றை இப்பொழுது படித்தறியலாம்.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கட்டுரை

முன்னுரை:

உலக நாடுகளில் ஊழல் என்பது மிக பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.
இந்தியா மட்டும் இதற்கு விதி விலக்கல்ல. ஊழல் காரணமாக அனைத்து நாடுகளின் ஜனநாயகம் பாதிப்படைகின்றது.

இதனால் பெரிய பிரச்சனைகளை ஒவ்வொரு நாடுகளும் எதிர்கொண்டு வருகின்றன. சிறு ஊழல் கூட அரசினைப் பெரிதும் பாதிக்கின்றது. இத்தகைய ஊழலானது தீராத பிரச்சனையாக சமூகத்தில் இன்று வரை வளர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த ஊழலை ஒழிப்பது என்பது அவசியமான ஒன்றாகும்.

இந்தியாவில் ஊழல்:

இந்தியாவில் ஊழல் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இது இந்தியாவின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதிக்கின்றது. 2011-ஆம் ஆண்டில் இந்தியா திரான்சிபரன்சி இன்டர்நேசனலின் ஊழல் மலிவுச் சுட்டெண்ணில் (Corruption Perceptions Index) 178 நாடுகளில் 95-வது இடத்தில் இருந்தது.

“பண மோசடித் தடுப்புச் சட்டங்கள்”, “ஊழல் தடுப்பு சட்டம்-1988” போன்ற பல சட்டங்கள் இந்தியாவிலுள்ள போதிலும் ஊழல் மோசடிகள் லஞ்சம் போன்றவை சமூகத்தில் அதிகமாகவே காணப்படுகின்றன.

ஊழலால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பாதிப்புக்கள்:

ஊழல் எனபது ஒரு தனி நபரை மட்டுமன்றி ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியையும் முற்றிலும் முடக்கிவிடுகிறது. திறமை மிக்கவர்களது வாய்ப்புக்கள் ஊழலினால் பறிக்கப்படுகின்றன. மக்களுக்கு சேவை செய்பவர்களே தவறு செய்யும் போது பாமர மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

குறிப்பாக இந்த ஊழல் அரசினால் கிடைக்கும் சலுகைகள்⸴ நன்கொடைகள் உரிய முறையில் ஏழை மக்களுக்கு சென்றடைவதை ஊழல் மோசடிகளினால் தடுக்கப்படுகின்றது. ஊழல் மூலம் தவறுகள் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன. இத்தகைய நிலை வளர்த்து கொண்டே சென்றால் ஒரு நாட்டின் வளர்ச்சி மேலும் மேலும் பின்தங்கி கொண்டே செல்லும்.

தேசிய ஒருமைப்பாடு கட்டுரை

ஊழலை ஒழிப்பது எப்படி?

ஊழல் ஒழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு என்பது ஒரு நாளில் முடிவடைகின்ற காரியம் கிடையாது. இதனை தனிநபர்கள் முதல் அரசு வரை இணைந்து செயல்படுத்தினால் மட்டுமே ஒழிக்க முடியும். அதாவது லஞ்சம் தொடர்பாக ஒவ்வொரு அலுவலகத்திலும் புகார் எண்⸴ முகவரி இடம் பெற வேண்டும்.

குறிப்பாக அரசுத் திட்டங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட வேண்டும். பல வலுவான சட்டங்களைக் கொண்டு வரவேண்டும். ஏற்கனவே உள்ள சட்டங்கள் புதிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதேபோல் தினசரி ஊழல் வழக்குகளை விசாரிக்க வேண்டும். ஊழல் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படல் வேண்டும். இவை போன்றவை அரசினால் மேற்கொள்ளப்படும் போது ஊழல்கள் தடுக்கப்படும்.

தனிநபர் பொறுப்பு:

ஒரு அதிகாரியின் அதிகாரத்தினால் மட்டும் ஊழல் நடைபெறுவதில்லை. சுயநலம் உள்ள மனிதர்கள் தம் தேவைகளுக்காகவும்⸴ விருப்பங்களுக்காகவும் லஞ்சம் கொடுக்கின்றனர். லஞ்சம் பெறுவது போல் லஞ்சம் கொடுப்பதும் தவறாகும்.

ஊழலற்ற இந்தியாவாக நம் நாடு மாற வேண்டும் என்றால் தனி மனிதர் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஊழல் தொடர்பான விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். ஊழல் நடைபெறுவதைத் தடுக்க நம்மாலான முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஊழல் நடைபெறுவதைக் கண்டால் அதனை வெளிக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது நமது கடமை என்பதை அனைவரும் உணர்ந்து செயற்படல் நன்று. தனிமனிதர் ஒவ்வொருவரிலும் மாற்றங்கள் ஏற்படும் போது தான் ஊழலை ஒழிக்க முடியும்.

முடிவுரை:

ஊழல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் போது தான் ஊழல் குறைவடையும். ஊழலற்ற ஒரு நாடாக இந்தியா மாறும் போது இந்தியாவின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும். அரசினுடைய சலுகைகள்⸴ காப்பீடுகள் உரிய வகையில் மக்களுக்குச் சென்றடையும். ஊழலை ஒழிப்போம் ஊழலற்ற இந்தியாவை வளர்த்தெடுப்போம்.

இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை

 

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement