ஒற்றுமையே உயர்வு தரும் கட்டுரை | Otrumaiye Uyarvu Essay in Tamil
ஒற்றுமையே உயர்வு கட்டுரை: வணக்கம் நண்பர்களே இந்த தொகுப்பில் ஒற்றுமையே உயர்வு எனும் தலைப்பில் கட்டுரை பார்ப்போம். உலக அமைதியும் வளர்ச்சியும் உலக மக்களின் ஒற்றுமையில் தான் இருக்கிறது. மனிதர்கள் அனைவரும் ஒன்றுபட்டு இருந்தால் நாட்டின் வளர்ச்சியானது பிரிவின்மை இல்லாமல் இருக்கும். வாங்க இந்த பதிவில் ஒற்றுமையே உயர்வு பற்றிய கட்டுரையை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..
ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை |
1. முன்னுரை |
2. ஒற்றுமையின் பயன்கள் |
3. ஒற்றுமையின் முக்கியத்துவம் |
4. ஒற்றுமையின் நன்மை |
5. முடிவுரை |
முன்னுரை:
மனித வாழ்க்கையானது தினம் தினம் பல பிரச்சனை மற்றும் சவால்கள் நிறைந்துள்ளது. ஒற்றுமை உள்ள உயிரினங்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெறுகிறது. ஒற்றுமையில்லாத உயிரினங்கள் எவ்வளவு வலிமை உடையனவாய் இருந்தாலும், அவை வாழ்க்கைப் போரில் தோல்வியை தான் அடைகின்றன. வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் மனிதர்கள் உதவி செய்து வாழ வேண்டும். இங்கு யாரும் தனிமனிதர்கள் கிடையாது என்ற மனநிலை மனிதர்களுக்கு உருவாக வேண்டும்.
ஒற்றுமையின் பயன்கள்:
ஒற்றுமையே வலிமை தமிழ் கட்டுரை: ஒருவர் மற்றவர்களை வெறுத்து ஒதுக்குவதால் மனிதர்களிடம் எப்போதும் ஒற்றுமை உணர்வு வராது. மக்களிடையே ஒற்றுமை இல்லாமல் போக பணம், அந்தஸ்த்து, மதம், பொருளாதார நிலை போன்ற பல காரணங்கள் காணப்படுகின்றன. இல்வாழ்வின் ஒற்றுமையே ஊரின் ஒற்றுமையாய், நாட்டின் ஒற்றுமையாய், உலகின் ஒற்றுமையாய் வளர்ச்சி அடையும். அவ்வளர்ச்சியிலே கல்வியின் மாண்பைநாம் பார்க்கலாம். கலையின் நலத்தைக் காணலாம்; செல்வத்தின் செழிப்பைக் காணலாம்; இன்பத்தின் எழிலைக் காணலாம்; வீரத்தின் பொலிவைக் காணலாம்; வெற்றியின் விளைவைக் காணலாம்.
ஒற்றுமையின் முக்கியத்துவம்:
ஒற்றுமையே உயர்வு தமிழ் கட்டுரை: உலகம் அமைதி நிலையில் இருக்க மனிதர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இருக்கும். ஒருவருக்கொருவர் சண்டை போட்டு கொள்வதை தவிர்த்துவிடுதல் நல்லது. ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் ஒற்றுமையாக வாழ்ந்தால் தான் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆதி மனிதர்களும் ஒற்றுமையான வாழ்க்கையை தான் வாழ விரும்பினார்கள். அவர்கள் எப்போதும் கூட்டமாகவே வாழ்ந்து வந்தார்கள். உலகம் முழுவதும் பிரிவு இல்லாமல் இருப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு அனைவரும் சமம் என்று நினைக்க வேண்டும்.
தூய்மை இந்தியா மாணவர்களின் பங்கு கட்டுரை |
எரிபொருள் சிக்கனம் கட்டுரை |
ஒற்றுமையின் நன்மை:
ஒற்றுமை வாழ்வு எனும் விளக்கு ஒளி வீச வேண்டுமானால், அன்பு என்னும் எண்ணெய் வேண்டும். அறம் என்னும் திரி வேண்டும். அளவோடு செயல்படுதல் என்னும் காற்று வேண்டும். அப்பொழுது வாழ்வாம் விளக்கு ஒளி வீசுவதைக் காண முடியும். எனவே, வாழ்க்கையாகிய விளக்கு ஒளிவீச வேண்டுமானால், கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழவேண்டும். ஒரு நாட்டில் ஒற்றுமை உள்ள மக்கள் இருந்தால் தான் அந்த நாடே சிறந்த நாடாக விளங்கும். உயிர் இனங்களான எறும்புகள் உணவு தேடும்போது சேர்ந்தே தான் உணவு தேடும். காக்கைகள் தன் சுற்றத்தை அழைத்தே உணவுண்ணும். சிங்கங்கள் கூட்டமாகவே வேட்டையாடும். பறவைகள் கூட்டமாகவே கடல் தாண்டும். உயிரினங்கள் போன்று நாமும் ஒற்றுமையாக இருக்க கற்றுக்கொள்வோம்.
முடிவுரை:
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு” என்று பாரதியார் நமக்கு பாடலின் மூலம் எடுத்துரைத்துள்ளார். மற்றவர்களுக்கு உதவுதல், விட்டு கொடுக்கும் மனப்பான்மை மற்றும் இரக்கம் போன்ற நல்ல குணங்களை வளர்த்து ஒற்றுமையாக வாழ்வோம். அதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு ஒரு நல்ல உதாரணம்.
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |