கடல் வளம் கட்டுரை | Kadal Valam Katturai in Tamil

Kadal Valam Katturai in Tamil

கடல் பற்றிய கட்டுரை | Kadal Katturai in Tamil

நண்பர்களுக்கு வணக்கம் இன்றைய பதிவில் கடல் பற்றிய கட்டுரையை படித்து தெரிந்துக்கொள்ளலாம். நீர் வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு சிறந்த இடமாக இருப்பது கடல் பகுதிதான். நம்முடைய மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் கடற்கரை பகுதிக்கு சென்றுவிட்டால் மனதில் உள்ள அனைத்து கஷ்டங்களும் விலகிவிடும். உலகின் மூன்றில் இருபங்கு கடற்கரையினால் தான் சூழப்பட்டுள்ளது. சரி வாங்க நண்பர்களே கடல் பற்றிய கட்டுரையை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

இயற்கை வளம் கட்டுரை

பொருளடக்கம்:

முன்னுரை 
கடலின் நன்மைகள் 
கடல் இயற்கை 
மனதை அமைதிப்படுத்தும் இடம் 
கடல் சீற்றம் 
முடிவுரை 

முன்னுரை:

கடல் என்பது ஒரு அழகிய இடத்தை சேர்ந்ததாகும். கடல் பகுதியில் மீன்கள் மற்றும் கடல் சார்ந்த நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது. கடலுக்கு உரவுநீர், உவரி, இரைநீர், சலகாங்கம், ஊர்மிமாலி, வாரீசம் என்ற பல பெயர்கள் அமைந்துள்ளது.

கடலின் நன்மைகள்:

கடலின் மூலம் மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. கடல் பகுதியை நம்பியே பல மீனவ குடும்பங்கள் பிழைப்பு நடத்துகிறார்கள். மனிதர்களாகிய நாம் உயிர் வாழ்வதற்கு கடற்கரையில் உள்ள நண்டு, இறால், மீன்கள், கணவாய் போன்ற உயிரினங்களை நாம் சாப்பிடுகிறோம். கடல் பகுதி என்ற ஒன்று இருப்பதால்தான் நம்மால் இது மாதிரியான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாய் வாழ முடிகிறது.

நம் அன்றாட வாழ்க்கையில் மின்சார தேவை என்பது முக்கியமாக இருக்கிறது. கடல் அலைகளிலிருந்து தான் நமக்கு மின்சாரம் கிடைக்கிறது. அந்த காலத்தில் வணிக தொழிலை மேற்கொள்வதற்காக மக்கள் கப்பல் மூலம் கடல் வாணிகம் செய்தார்கள்.

கடல் இயற்கை:

கடல் பகுதியில் உப்பு பொருட்கள் முதல் அனைத்து வகையான கனிமப்பொருட்கள் கிடைக்கிறது. உப்பு, மக்னீசியம், புரோமின், கந்தகம், பாஸ்பேட், மாங்கனீசு உருண்டைகள், தங்கம், நிலக்கரி தவிர இரும்பு, தகரம், பொட்டாசியம், யுரேனியம் மற்றும் குரோமைட் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகள் தொழிற்சாலை வளர்ச்சிக்கு பெரிதும் பயன்பாடாக இருக்கிறது.

நீரின்றி அமையாது உலகு கட்டுரை
மரம் வளர்ப்போம் கட்டுரை

மனதை அமைதிப்படுத்தும் இடம்:

நம்மில் பலருக்கும் மனதில் கஷ்டம் இல்லாமல் இருக்காது. மன ஆறுதல் பெறுவதற்கு சிறந்த இடமாக இருப்பது கடற்கரை. கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது கிடைக்கும் மன நிம்மதி கடற்கரைக்கு சென்று விட்டு திரும்பும் போதும் அதே நிம்மதி கிடைக்கும்.

சிறிய குழந்தைகள் கடற்கரைகளில் மணல் வீடு கட்டி ஆனந்தமாய் இருப்பார்கள். மேலும் பட்டம் விடுதல், ஓடி பிடித்து விளையாடி மகிழ்வார்கள், அங்குள்ள குதிரையில் சவாரி செய்வார்கள், கடலில் அனுமதி செய்யப்பட்ட பகுதி வரை சென்று குளித்து மகிழ்வார்கள், பெரியவர்கள் சிரித்து பேசி மகிழ்வதற்கு சிறப்பிடமாய் இருப்பது கடற்கரை பகுதி.

கடல் சீற்றம்:

கடல் நமக்கு பல நன்மைகளை கொடுத்தாலும் அதோடு பின் விளைவுகளையும் கொடுக்கிறது. அதுதான் கடல் சீற்றம். கடல் பகுதியில் சீற்றம் ஏற்படும்போது அங்குள்ள பல மக்களின் உயிர் பறிபோகிறது. மக்கள் தஞ்சம் அடைந்திருக்கும் வீடுகள் பல பொருட்கள் சேதமடைகிறது.

முடிவுரை:

பல நன்மைகளை கொடுக்கும் கடல் பகுதிக்கு நம்மால் முடிந்த அளவிற்கு தீமைகள் வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கடலில் தேவையில்லாத குப்பைகளை போட்டு கடலில் வாழும் நீர்வாழ் உயிரினங்களை சேதப்படுத்துதல் கூடாது. அதுமட்டுமல்லாமல் நடுக்கடலில் எண்ணெயை ஊற்றி கடல் நீரினை மாசுபடுத்துதல் கூடாது. கடல் பகுதியானது மழையை தரக்கூடிய முக்கிய ஆதாரமாக இருப்பதால் கடலை மாசுபடுத்தாமல் காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இது போன்று கட்டுரை சார்ந்த பதிவுகளை  விரும்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Tamil Katturai