காமராஜரின் குழந்தைகளுக்கான பேச்சு போட்டி கட்டுரை | Kamarajar Speech in Tamil F For Kids
நாம் குழந்தை பருவத்தில் விரும்பி படித்த புத்தகம் என்றால் அது தமிழ் புத்தகம் தான். தமிழ் புத்தகத்தில் செய்யுள், உரைநடை மற்றும் இலக்கியங்கள் என நிறையவற்றை படித்து இருப்போம். அதேபோல் இத்தகைய வரிசையில் தமிழ் தேச தலைவர்கள் பற்றியும் தெரிந்து இருப்போம். அதாவது மஹாத்மா காந்தி, காமராஜர், நேரு, திருப்பூர் குமரன் என இந்த வகையில் அவர்களின் தொன்று பற்றியும், அவர்களின் சிறப்பு பற்றியும் தெரிந்து இருப்போம். அந்த வகையில் தற்போது வருகின்ற ஜூலை மாதம் 15-ஆம் தேதி அன்று கர்ம வீரர் என்று அழைக்கப்படும் காமராஜரின் பிறந்தநாள் வருகிறது. இதனையொட்டி இன்றைய பதிவில் குழந்தைகளுக்குக்கான காமராஜரின் பேச்சு போட்டி கட்டுரையினை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
| காமராஜர் செய்த சாதனைகளை பற்றிய கட்டுரை |
Kamarajar Speech in Tamil for Kids:
குறிப்பு சட்டகம்:
- முன்னுரை
- ஆரம்ப கால கல்வி முறை
- காமராஜரின் அரசியல் வாழ்க்கை
- கர்மவீரர் தமிழக முதல்வர்
- கர்மவீரரின் திட்டம்
- தனிப்பட்ட வாழ்க்கை
- முடிவுரை
முன்னுரை:
தமிழகத்தில் சுதந்திர போராட்ட ஆர்வலராகவும், முதலமைச்சராகவும் இருந்தவர் காமராஜர். இவர் குழந்தைகள் மற்றும் மக்கள் என அனைவராலும் கல்விக் கண் திறந்த காமராஜர் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். மேலும் இவர் இந்திய தேசிய காங்கிரஸின் அமைப்பு தலைவராகவும் 2 முறை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. அதுமட்டும்மில்லாமல, வாழ்நாள் முழுவதும் திருமணமே வேண்டாம் என்று நாட்டிற்காக அரும்பாடுபட்டவர்.
ஆரம்ப கால கல்வி முறை:
விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு 1903-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15-ஆம் தேதி பிறந்தவர் தான் காமராஜர். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் காமாட்சி. அதன் பிறகே காமாட்சி என்ற பெயர் ஆனது காலப்போக்கில் அனைவராலும் காமராஜர் என்று அழைக்கப்பட்டது.
இவர் ஆரம்ப கால கல்வியினை 1907-ஆம் ஆண்டு பாரம்பரிய பள்ளியிலும், 1908-ஆம் ஆண்டில் யேனாதி நாராயண வித்யாசாலையில் பள்ளி படிப்பினை படித்து வந்தார். இதற்கு அடுத்த நிலையாக 1909-ஆம் ஆண்டு அவரது ஊரிலே உள்ள உயர்நிலை பள்ளியில் பள்ளிப் படிப்பனை தொடர்ந்தார். ஆனால் திடிரென அவர் தந்தை மரணம் அடைந்த காரணத்தினால் பள்ளி படிப்பினை முழுமையாக முடிக்காமல் பாதியிலேயே முடித்து விட்டார்.
காமராஜரின் அரசியல் வாழ்க்கை:

காமராஜர் இளம் வயதிலேயே பள்ளி படிப்பினை பாதியிலேயே முடித்தாலும் கூட நாள்தோறும் செய்தித்தாள்களை படித்து அதன் மூலம் தனது 18-வது வயதில் அரசியில் வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்.
இதன் பிறகு காங்கிரசு கட்சியில் முழு நேரத்தொண்டினை செய்து அதற்காக பொதுக்கூட்டங்களையும் நடத்த தொடங்கினார். மேலும் இவர் நடத்திய உப்பு சத்தியாகிரக போராட்டமானது இவரது வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையினை ஏற்படுத்தியது.
| காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை |
கர்மவீரர் தமிழக முதல்வர்:

கர்மவீரர் காமராஜர் 1954-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக முதல் முதலில் பணியாற்றினார். சி.ராஜகோபாலாச்சாரியார் ஆட்சியில் இருந்த போது 6,000 பள்ளிகள் ஆனது மூடப்பட்டுள்ளது. ஆனால் கர்ம வீரர் ஆட்சிக்கு வந்தபோது அத்தகைய 6,000 பள்ளிகளுடன் சேர்த்து மொத்தமாக 12,000 பள்ளிகளை திறந்து வைத்தார்.
மேலும் மதிய உணவுத்திட்டத்தினையும், குழந்தைகளுக்கு 37% கல்வி கிடைக்கும் வரையிலும் கல்வினை அளித்தார்.
மதிய உணவு திட்டம்:
காமராஜர் ஆட்சி காலத்தில் தான் இலவச கல்வி மற்றும் சீருடை மற்றும் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். நாட்டில் மூடப்பட்டிருந்த பள்ளிகளை திறந்தார். 17,000 பள்ளிகளையும் புதிதாகவும் திறந்தார். இதனால் தான் இவர் கல்வி கண் என்றழைத்தார்கள். குழந்தைகள் வறுமையினால் சிறுவயதிலையே வேலைக்கு போனார்கள். இதனை பார்த்து வருத்தப்பட்டார். அதனால் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தார். முதல் முறையாக ஆயிரம் விளக்கு என்ற பகுதியில் தான் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். ஒரு வேளை உணவு கிடைக்கும் என்ற எண்ணத்துடன் குழந்தைகள் பள்ளிக்கு வர ஆரம்பித்தார்கள். அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆனது 37% உயர்ந்தது.
கர்மவீரரின் திட்டம்:
பெருந்தலைவர் காமராஜர் தொடர்ச்சியாக 3 முறை முதலமைச்சராக வெற்றி பெற்றாலும் கூட இவர் 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பணியினை ராஜினாமா செய்தார்.
அதன் பிறகு மக்களுக்கான பணிகளை நிறுவ வேண்டும் என்றும் திட்டம் தீட்டினார். இவரை தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி , ஜக்ஜீவன் ராம் , மொரார்ஜி தேசாய் , பிஜு பட்நாயக், எஸ்.கே.பாட்டீல் உள்ளிட்ட ஆறு மத்திய அமைச்சர்களும், ஆறு முதல்வர்களும் அவர்களுடைய பணியினை ராஜினாமா செய்தனர். இத்தகைய பெருந்தலைவரின் திட்டமே காமராஜர் திட்டம் என்று அழைக்கப்ட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை:
கர்ம வீரர் காமராஜர் அவருடைய சொந்த ஊரான விருதுநகரில் வாழ்ந்த போது நகராட்சி அவருக்கு அளித்த சாதாரணமான நேரடி குடிநீர் வசதியினை வேண்டாம் என்று மறுத்து விட்டார்.
மேலும் எந்த ஒரு ஆடம்பர வாழ்கையினையும் வாழாமல் நாட்டிற்காக தன்னுடைய முழு வாழ்கையினையும் அர்ப்பணித்து திருமணம் கூட செய்து கொள்ளலாம் வாழ்ந்து வந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
முடிவுரை:
காமராஜர் அவரது 72-வது வயதில் மாரடைப்பு காரணமாக 1975-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி அன்று இயற்கை எய்தினார். மேலும் இவர் இறந்த போது எந்த சொத்துக்களும் அவருக்கு என்று இல்லை. வெறும் 4 சட்டை, 2 வேஷ்டி, 2 ஜோடி செருப்பு மற்றும் 130 ரூபாய் பணம் மட்டுமே இவருக்கு என்று இருந்தது.
| காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள் |
| இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க → | Tamil Katturai |














