கூட்டுறவு பற்றிய கட்டுரை | Kooturavu Katturai in Tamil
வாசகர்கள்அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கூட்டுறவு பற்றிய கட்டுரையை விவரித்துள்ளோம். நம்மில் பலருக்கும் கூட்டுறவு பறி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும். பதிவினை முழுவதுமாக படித்து கூட்டுறவு பற்றி தெரிந்துகொள்ளுங்கள். கூட்டுறவு என்பது, ஒருவருக்கொருவர் உதவி செய்து ஒற்றுமையாக வாழ்வது ஆகும்.
ஆதிமனிதர்களின் வாழ்க்கை முறையிலே கூட்டுறவு இருந்தது. அவர்கள் கூட்டமாகவே உணவு தேடி அலைந்தார்கள். கிடைத்த உணவினை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு வாழ்ந்தார்கள். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு ஏற்றவாறு வாழ்ந்தார்கள். இத்தகையை கூட்டுறவு முறைகள் தான் இப்போதுள்ள கல்வி, தொழில், பொருளாதாரம் போன்ற பல துறைகளிலும் காணப்படுகிறது.
கூட்டுறவு கட்டுரை:
குறிப்பு சட்டகம் |
|
முன்னுரை:
கூட்டுறவு என்பது கூட்டுறவு கொள்கைகளை அடிப்படையாக கொண்ட சமூக, பொருளாதார, நிறுவன அமைப்பாகும். மக்கள் எவ்வித கட்டாயமும் இன்றி, தானாகவே முன்வந்து தங்கள் பொருளாதார தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு சமத்துவ அடிப்படையுடன் மக்களாட்சி முறையில் ஒருங்கிணைந்து இயங்கும் முறையே கூட்டுறவாகும்.
கூட்டுறவு இயக்கம்:
கூட்டுறவு இயக்கம் என்பது, நம்பிக்கையையும் ஒற்றுமையையும் அடிப்படையாக கொண்டு நடைபெறும் ஒரு சமூக அமைப்பு ஆகும். மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல், சமநிலை அடைய வழிவகை செய்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. கூட்டுறவு இயக்கங்கள் பெரும்பாலும் தொழில்துறையில், விவசாயத் துறையில், வணிகத்தில், நிதி நிறுவனங்களில் பணிகளை மேற்கொள்கிறது.
கூட்டுறவு வங்கி தனிநபர் கடன் பெறுவது எப்படி?
கூட்டுறவின் வகைகள்:
விவசாய கூட்டுறவு சங்கங்கள் – விவசாயிகளுக்கு தேவையான தேவைகளை பூர்த்தி செய்ய விதைகள், உரம், இயந்திரங்கள் மற்றும் முதலீடு மூலம் உதவும் கூட்டுறவுகள் விவசாய கூட்டுறவு சங்கங்கள் ஆகும்.
வணிக கூட்டுறவுகள்- சில்லறை மற்றும் மொத்த விற்பனை செய்யும் நிறுவனங்களின் கூட்டமைப்பு வணிக கூட்டுறவுகள் ஆகும். இதன் மூலம் சிறு வர்த்தக நிறுவனங்கள் இணைந்து, குறைந்த அளவில் பொருட்களை பெறலாம்.
நிதி கூட்டுறவுகள் – காப்புறுதி, பங்கு முதலீடு, கடன் உள்ளிட்ட நிதி சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், கூட்டுறவு முறையில் செயல்படும். இவ்வகையான கூட்டுறவு நிதி கூட்டுறவுகள் ஆகும்.
கூட்டுறவு வங்கி – மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள்.
கூட்டுறவின் முக்கியத்துவம்:
- கூட்டுறவின் மூலம் சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நம்பிக்கை வளர்க்கப்படுகிறது.
- கூட்டுறவின் மூலம் பல அடித்தட்டு மக்களின் வாழ்வு மேம்படும்.
- கூடுதலான சொத்துக்களையும், நலன்களையும் எல்லோரும் பகிர்ந்து கொள்ளலாம்.
கூட்டுறவின் கொள்கைகள்:
- தன்விருப்பார்ந்த தடையற்ற (திறந்த) உறுப்புரிமை.
- மக்களாட்சி முறையில் அமைந்த கட்டுப்பாடும் நிர்வாகமும்.
- உறுப்பினர்களின் பொருளாதாரப் பங்களிப்பு
- கட்டுப்பாடுகளின்றியும் தானாகவும் தொழிற்படல்.
- கல்வி, பயிற்சி, தகவல்.
- கூட்டுறவுச் சங்கங்களிடையே ஒத்துழைப்பு.
- சமூக மேம்பாடு
கூட்டுறவின் பயன்:
நமது வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் கூட்டுறவு என்பது மிகவும் முக்கியம். குடும்பம், பள்ளி, வேலை என எங்கு சென்றாலும், அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பது மிகவும் அவசியம்.
முடிவுரை:
கூட்டுறவு ஒற்றுமை, சகோதரத்துவம், நம்பிக்கை ஆகியவற்றை நமக்குள் வளர்க்கின்றது. இது அனைத்து மக்களுக்கும் மேம்பாட்டை வழங்கும் வழியாகவும் கருதப்படுகிறது.
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |